தருமபுரி புறநகர் பேருந்துநிலையத்திற்கு தினமும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்குக்கு 100 க்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்கிறது. அதே போல் பல்வேறு பணிகளுக்காக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் தருமபுரி பேருந்துநிலையம் எப்போது பொது மக்கள் நிரம்பி பரபரப்பாக காணப்படும். பேருந்து நிலையத்தின் நடுவே புறக்காவல் நிலையம் உள்ளது. இங்குள்ள காவல்துறையினர் திருட்டு மற்றும் குற்றசம்பவங்களை தடுக்கும் பணியில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனாலும் காவல்துறையினர் கண்காணிப்பு குறைவால் அடிக்கடி பயணிகளிடம் பிக்பாக்கெட் அடிப்பது, வாகன திருட்டு, பெண்களிடம் கேலி கிண்டல் செய்வது, பாலியல் ரீதியாக சீண்டுவது, என அவ்வப்போது குற்றங்கள் நடப்பது வழக்கம். இந்நிலையில் இன்று புறநகர் பேருந்து நிலையம் திருப்பத்தூர் பேருந்துகள் நிற்கும் இடத்தில் வெளியூர் செல்வதற்கான ஒரு பெண் தனது குழந்தைகளுடன் நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு முதியவர் குடிபோதையில்  அங்கு நின்றிருந்த பெண்ணின் தவறான முறையில் தொட்டுள்ளால், இதனால் ஆத்திரமடைந்த அப்பெண் பொதுமக்கள் மத்தியில் இது போன்று பெண்களிடம் நடந்துகொள்ளுவயா என திட்டி முதியவரை சரமாரியாக அடித்து கீழே தள்ளி உதைத்துள்ளார். 


மேலும் படிக்க: இந்தியாவையே நடுநடுங்க வைத்த தக்கர் கொள்ளையர்கள்.! வரலாற்றின் பின்னணி


இதனால் அதிர்ச்சியடைந்த முதியவர் அப்பெண்ணின் பிடியிலிருந்து தப்பித்தால் போதும் என  ஓடிவிட்டார். பிறகு அப்பெண் அங்கிருந்து  தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு அவர் செல்லும் பேருந்து வந்த உடன் ஏறி சென்றுவிட்டார். மேலும் அப்பெண்ணின் செயலை அங்குள்ள பொதுமக்கள் பாராட்டினர். அப்பெண் முதியவரை அடித்ததை  அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்து  சமூக வலைதலங்களில் பரப்பியதால் தற்போது அந்த புகைபடம் வைரலாகி வருகிறது. மேலும் இது போன்ற வெளியூர் செல்லும் பெண்களிடம் குடிபோதையில் தவறாக நடக்கும்  சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இது போன்ற நடக்காமல் இருக்க காவல்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.



மேலும் படிக்க | தடயத்தை அழிக்க திருடன் செய்த காரியத்தை பாருங்கள் -சிசிடிவி காட்சி


மேலும் படிக்க: சிசிடிவி கேமராவை துணியால் மறைத்து பூட்டை உடைத்து தங்க நகைகள் திருட்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ