சிறுக சிறுக சேமித்த ₹2,50,000 ஒரு ரூபாய் நாணயங்களை கொடுத்து பைக் வாங்கிய வாலிபர்!
சிறுக சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழியை நிரூபித்த இளைஞருக்கு நண்பர்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
சேலம் அம்மாபேட்டை காந்தி மைதானம் பகுதியை சேர்ந்தவர் பூபதி யூ யூப் சேனல் நடத்தி வருகிறார் இவர் சிறுவயது முதலே மிக உயர்ந்த விலையில் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என்பது ஆசை அதற்காக ரூபாய் நாணயங்களை சிறுக சிறுக தினந்தோறும் சேர்க்க தொடங்கினார். முதலில் ஐந்து ரூபாய் நாணயங்களை சேர்த்தவர் பிறகு ஒரு ரூபாய் நாணயங்களை கொண்டு இருசக்கர வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற அடிப்படையில் தங்களால் முடிந்த அளவிற்கு ஒரு ரூபாய் நாணயங்களை சேர்த்துள்ளார்.
உயர் ரக வாகனம் என்பதால் அதிகளவில் நாணயத்தை சேர்க்க வேண்டும் என நினைத்த பூபதி தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பல்வேறு வங்கிகளுக்கு சென்று ஒரு ரூபாய் நாணயங்களை சேகரித்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் நாணயத்தின் மதிப்பு இரண்டரை லட்ச ரூபாய் ஆனதால் இருசக்கர வாகனம் வாங்க வேண்டும் என முயற்சி செய்துள்ளார். இரண்டரை லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நாணயங்களாக கொடுத்து இருசக்கர வாகனம் வாங்க முடிவு செய்து இருப்பதாக கூறி பல ஷோரூம்கள் அலைந்தும் அதற்கு இருசக்கர வாகன நிறுவனங்கள் சம்மதிக்காததால் நம்பிக்கை இழந்த பூபதி கடைசியில் அம்மாபேட்டை பகுதியில் உள்ள பஜாஜ் ஷோரூம் சென்று ஒரு ரூபாய் தன்னுடைய விருப்பத்தை எடுத்துக்கூறி ஒரு ரூபாய் நாணயங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | அட்டகாச மைலேஜ், மலிவான விலை: இந்தியாவின் மிகச்சிறந்த பைக்குகள்
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த நிறுவன அதிகாரிகள் முதலில் அதனை மறுத்து உள்ளனர். பிறகு பூபதியின் பின்னணியை அறிந்த வாகன விற்பனை உரிமையாளர்கள் அதற்கு சம்மதம் தெரிவித்தனர். இதனையடுத்து தான் சேகரித்து வைத்த ஒரு ரூபாய் நாணயங்களை மூட்டை மூட்டையாக கட்டி அம்மாபேட்டை பகுதியில் உள்ள இரு சக்கர வாகன விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு மூட்டை மூட்டையாக தரையில் கொட்டி இரண்டு லட்ச ரூபாயைத் தனது நண்பர்கள் மற்றும் நிறுவன ஊழியர்களை கொண்டு என தொடங்கி சுமார் 10 மணி நேரம் ஒரு ரூபாய் நாணயத்தை எண்ணி நிறுவன அதிகாரிகளிடம் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து அவருக்கு இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக் கொண்ட பூபதி இளம் வயது முதலே சிறுக சிறுக சேமித்து வைத்ததாகவும், ஒரு ரூபாய் நாணயங்களை தேடித்தேடி சேகரித்து புதிய அனுபவத்தை கொடுத்ததாகவும், அப்போது கடுமையாகவும் சவாலாகவும் இருந்தது என்றார். ஆனால் தற்போது மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் .
சிறுக சிறுக சேமித்தால் பெருக வாழலாம் என்ற பழமொழிக்கு ஏற்ப இவரது செயலை நண்பர்கள் வெகுவாகப் பாராட்டினார்.
மேலும் படிக்க | Post Office வாடிக்கையாளர்களே அலர்ட், ஏப்ரல் 1 முதல் முக்கிய மாற்றங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR