Viral Video : உட்கட்சி பூசலில் பாஜக பிரமுகர் மீது பாஜகவினரே கொலைவெறி தாக்குதல்!
கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக பாஜக நெசவாளர் பிரிவு செயலாளரை பாஜகவினரே தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் கோவை மாவட்ட பாஜக நெசவாளர் பிரிவு செயலாளராக உள்ளார். மேலும் அதே பகுதியில் போட்டோ ஸ்டூடியோ வைத்து நடத்தி வருகிறார்.
இதற்கிடையே, பாஜகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் அதில் ஜெயக்குமார் போட்டியிடக்கூடாது என பாஜகவை சேர்ந்த கார்த்திக், முத்துக்குட்டி ஆகியோர் கூறி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் போட்டோ ஸ்டியோவுக்கு வந்த கார்த்திக், முத்துசாமி மற்றும் அடையாளம் தெரியாத இருவர் ஜெயக்குமாரை மிரட்டியதுடன் அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
மேலும், ஜெயக்குமாரை கத்தியால் குத்தியதால் அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஜெயக்குமார் சுயநினைவு இழந்ததாகவும், தற்போது தான் சுயநினைவு வந்ததாகவும், தன்னை தாக்கிய பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமநாதபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மேலும் படிக்க | பேக்கரி ஊழியருக்கு அரிவாள் வெட்டு - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
இந்த புகாரில்... பாஜகவில் நடைபெற உள்ள உட்கட்சி தேர்தலில் நான் எந்த பதவிக்கும் போட்டியிட கூடாது என எங்கள் கட்சியை சேர்ந்த காத்திக் மற்றும் முத்துக்குட்டி ஆகியோர் மிரட்டி வந்தனர். ஆனால் கட்சி பதவிக்கு போட்டியிடுவது எனது விருப்பம் அதனை நீங்கள் எனக்கு சொல்ல வேண்டியதில்லை என அவர்களிடம் கூறினேன். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக், முத்துக்குடி உள்ளிட்ட சிலர் எனது கடைக்குள் அத்துமீறி நுழைந்து என் மீது தாக்குதல் நடத்தியதாக புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளையும் காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். சம்பவம் தொடர்பாக ஜெயக்குமார் அளித்த புகார் அடிப்படையில் கார்த்திக், முத்துகுட்டி உள்ளிட்ட 4 பேர் மீது ராமநாதபுரம் போலீசார் 7 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உட்கட்சி பூசல் காரணமாக கோவையில் பாஜக பிரமுகரை பாஜகவினரே சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | தூத்துக்குடி அரசு மருத்துவரை கடத்தி கொலைவெறி தாக்குதல்: பஞ்சாயத்து தலைவர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR