Viral Video: இருசக்கர வாகனத்தில் புகுந்த பாம்பை பிடித்த தீயணைப்பு துறையினர்
பொதுவாகவே பாம்பு என்ற பெயரை கேட்டால் படையே நடுங்கும் என பழமொழி ஒன்று உண்டு. அந்த வகையில் ஆம்பூரில், இரு சக்கர வாகனம் ஒன்றில் பாம்பு ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது.
பொதுவாகவே பாம்பு என்ற பெயரை கேட்டால் படையே நடுங்கும் என பழமொழி ஒன்று உண்டு. அந்த வகையில் ஆம்பூரில், இரு சக்கர வாகனம் ஒன்றில் பாம்பு ஒளிந்து கொண்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது.
ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் செயல்பட்டு வரும் தபால் நிலையத்தில் பணியாற்றும் பணியாளர்கள் தங்கள் இருசக்கர வாகனங்களை அலுவலகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்தது. அங்குள்ள ஒரு இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததை அடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
வாகனத்தை நிறுத்தி விட்டு சென்ற உரிமையாளர், திரும்பி வந்து பொருட்களை வைக்க வாகன டிக்கியை திறந்த போது அதில் சுமார் ஒரு மீட்டர் நீளத்திற்கு பாம்பு (Snake) இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் இது குறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த 3 பேர் கொண்ட தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாகனத்தை பிரித்து பாம்பை பிடித்து ஆம்பூர் வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
ALSO READ | Viral Video: ‘என் ஆளை விடுங்க’; கோழிக்காக சேவல் போட்ட சண்டை வீடியோ!
இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியது.
ALSO READ | Viral Video: ‘யார் மீது என்ன கோபமோ’; தன்னைத் தானே கடித்துக் கொள்ளும் பாம்பு..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR