UKG சிறுமிக்கு பாலியல் தொல்லை... திமுக கவுன்சிலர் கைது - ஸ்டாலின் அளித்த பதில் என்ன?
CM Stalin In TN Assembly: விருத்தாச்சலத்தில் யுகேஜி படிக்கும் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆட்படுத்திய திமுக கவுன்சிலர் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
CM Stalin In TN Assembly: கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், திமுக கவுன்சிலர் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் திமுக நீக்கியது.
இந்நிலையில், விருத்தாச்சலம் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அதற்கு பதிலளித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவி வீட்டிற்கு சென்ற பின் தனக்கு வயிறு வலிப்பதாக பெற்றோருடன் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது அந்த சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து சிறுமி விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர் - திருச்சி சிவா!
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் தாயார் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டதன் அடிப்படையில் அப்பள்ளியின் தாளாளரும் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியருமான பக்ரிசாமி என்பவர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதும் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு பாரபட்சமின்றி கடுமையாக நடவடிக்கை எடுத்திட நான் உத்தரவிட்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டுள்ள பக்கிரிசாமி விருத்தாசலம் நகர் மன்றத்தின் 30ஆவது வார்டு உறுப்பினராக உள்ளார் என்பதை அறிந்த உடனே அவர் திமுகவின் அடிப்படை உறுப்பினரில் இருந்து ரத்து செய்யப்பட்டு கட்சியில் இருந்தும் நிரந்தரமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களும் உரிய விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த அரசை பொருத்தவரை செய்தி கேள்விப்படவில்லை, தொலைக்காட்சி மூலமாகத்தான் பார்த்தேன் என கூற தயாராக இல்லை. செய்தி அறிந்த உடனேயே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசி உடனடியாக கைது செய்து அதற்கு பிறகு சொல்ல வேண்டும் என தகவல் அளித்திருந்தேன்.
அந்த அடிப்படையில் குற்ற செயலில் ஈடுபடுவோர் குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மனித குலத்திற்கு அவமான சின்னம் என கருதுகிறோம். அந்த வகையில் இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது எந்த விதமான பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கைகள் துரிதமாக எடுப்போம்" என்றார்.
மேலும் படிக்க | திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ