தமிழ்நாட்டில் அடுத்து யார் ஆட்சி அமைப்பதை குறித்து கவர்னர் வித்யாசாகர்ராவ் தொடர்ந்து நிதானமான போக்கை கடைபிடித்து வருகிறார். இதுவரை எந்த முடிவும் எடுக்க வில்லை. மேலும் அவர் தொடர்ந்து தமிழக அரசியல் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்று முன்தினம் சென்னை வந்த கவர்னர் வித்யாசாகர் ராவை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இருவரும் அவரை சந்தித்து பேசினார். ஆளுநரிடம் சசிகலா தரப்பில் ஆட்சியமைக்க உரிமை கோரினார்கள். முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில் ஆளுநர் வாய்ப்பளிக்கும் பட்சத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என தெரிவித்துள்ளார்.  


இந்நிலையில் போயஸ் தோட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் சசிகலா பேசியதாவது:-


ஒரு அளவுதான் பொறுமை காப்போம் அதற்கு மேல் செய்யவேண்டியதை செய்வோம்.கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு உள்ளது. பல சோதனைகளை தாண்டி கடியை கட்டிகாத்தவர் ஜெயலலிதா. அதிமுக பிளவு படக்கூடாது. ஜெயலலிதாவுக்கு வந்த சோதனைபோல் தற்போது நமக்கு சோதனை வந்து உள்ளது. தொண்டர்கள் என்னுடன் இருக்கும் வரை நான் யாருக்கும் எதற்கு அஞ்சபோவது இல்லை. 


அரசியல் சாசன இறையாண்மை, ஜனநாயகம் மற்றும் தமிழகத்தின் நலனை ஆளுநர் காப்பாற்ற வேண்டும். கடந்த 5-ம் தேதி ஆளுநரை சந்தித்தபோது எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை அளித்து அரசு அமைக்க என்னை அழைக்க வேண்டும் என விரிவாக விளக்கம் அளித்தேன். ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து இருந்தோம். ஓரளவுக்கு மேல் தான் பொறுமையை கையாள முடியும் அதற்கு மேல் நாம் ஒன்று சேர்ந்து செய்யவேண்டியதை செய்வோம். ஒன்றரை கோடி கட்சி தொண்டர்களை அம்மா என்னிடம் விட்டு சென்று இருக்கிறார். அவர்கள் எனக்கு துணை இருக்கும் போது ஒரு சிலரின் ஆட்டங்கள் என்னை ஒன்றும் செய்ய முடியாது என அவர் தொண்டர்கள் மத்தியில் பேசினார்.


சசிகலா பேச்சுக்கு எம்பி மைத்ரேயன் கூறியதாவது:-


சசிகலா மிரட்டும் தொனியில் பேசியது பேசியுள்ளது கண்டிக்கத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார். அவர் மிரட்டும் தொனியில் பேசியது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக குடியரசு தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோர் தலையிட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.