தென் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - மீனவர்களுக்கு எச்சரிக்கை
எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம், பாதுகாப்பாக வெளியே செல்லவும்...
தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவ மழை மேலும் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நவம்பர் 6,7 ஆம் தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும், நவம்பர் 7,8 ஆம் தேதிகளில் மன்னார் வளைகுடா மற்றும் குமரி கடல் பகுதிக்கும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி, இந்தியப் பெருங்கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் காணப்படுகிறது. காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன்மூலம் வட கிழக்கு பருவமழை வலுப்பெறும்.
இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் தமிழகத்தில் அநேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் மிக கனமழையும் பெய்யக் கூடும்.
சென்னை மாநகரத்தை பொருத்த வரை மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனக் கூறினார்கள்.