பவானிசாகர் அணையிலிருந்து இன்று முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளில், முதல் போக பாசனத்திற்காக தமிழக அரசு தண்ணீரை திறந்துவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அணைக்கு வரும் நீர்வரத்தை பொறுத்து தேவைக்கேற்ப, தண்ணீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் அணையில் இருந்து விவசாயத்திற்காக (Water Release for Agriculture) நீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.


மேலும் படிக்க | தமிழகத்தில் 3 மாதங்களுக்கு பிறகு கொரோனா தொற்றால் உயிரிழப்பு


அவர் வெளியிட்ட உத்தரவில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:


காலிங்கராயன் வாய்க்கால் பகுதிகளில் உள்ள 15,743 ஏக்கர் முதல் போக பாசன நிலங்களுக்கு, 16.06.2022 முதல் 13.10.2022 வரை 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்த விட வேண்டும். இதற்கான உத்தரவு கோயம்புத்தூர் மண்டலம் நீர்வளத்துறை தலைமைப் பொறியாளருக்கு வழங்கப்பட்டுள்ளது. 


5184 மில்லியன் கன அடிக்கு மிகாமல், இருப்பு மற்றும் நீர்வரத்தை பொறுத்து, தேவைக்கேற்ப பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | இரவு நேர உணவே ஒருவரின் ஆரோக்கியமான பாலியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR