நீர் நிலைகளில் வீடு கட்டாதீர்கள் - துரைமுருகன் வைக்கும் வேண்டுகோள்
பொதுமக்கள் நீர் நிலைகளில் வீடு கட்ட வேண்டாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர் தேக்கத்தை தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால் வளத்துறை அமைச்சர் ஆவடி கா.மு.நாசர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கனஅடியில் தற்போது 2960 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. மேலும் நீர்வரத்து கூடும் என்பதால் அணையின் பாதுகாப்பு கருதி இன்று காலை 8 மணி முதல் 10 ஆயிரம் கன அடி உபரி நீர் 10 மதகுகள் வழியாக கொசத்தலை ஆற்றில் திறந்து விடப்பட்டது.
இதனை அடுத்து தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பால்வளத் துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜெ.கோவிந்தராசன், நீர்வளத்துறை துறை செயற்பொறியாளர் பொதுப்பணி திலகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “ அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளது. இதனால் உபரி நீரை வெளியேற்றி வருகிறோம். சாலை வசதிகளை நெடுஞ்சாலைதுறையினர் செய்வர். பூண்டி ஏரி கரையை ஒரு அடி உயர்த்தும் திட்டம் உள்ளது. ஒரு காலத்தில் பூண்டி ஏரி அழகாக இருந்தது, தற்போது இல்லை;
இந்தாண்டு பட்ஜெட்டில் பூண்டி ஏரி பராமரிக்க பட்ஜெட் ஒதுக்கப்பட்டு பூந்தோட்டமாக மாறும். அனைத்து ஏரிகளும் நிரம்பியுள்ளன. நீர்நிலைகளில் பொதுமக்கள் வீடுகளை கட்ட வேண்டாம்” என்றார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ