ஓபிஎஸ்-ஐ திட்டியும், குறை சொல்லியும் பயனில்லை.. நேரம்தான் வேஸ்ட் - பெங்களூர் புகழேந்தி!
அதிமுகவிலுருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றினைந்து மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம் என பெங்களூர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலுருந்து நீக்கப்பட்ட பெங்களூர் புகழேந்தி, அன்வர் ராஜா, ஒ.ராஜா மற்றும் பலர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஆலோசனை நடத்தினர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் பல்வேறு மாவட்டத்தில் ஒலிக்க தொடங்கியது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தம்பி ஒ.ராஜா, சசிகலாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அன்வர் ராஜா, ஒ.ராஜா மற்றும் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
மேலும் படிக்க | 3வது வழக்கிலும் ஜாமீன்; சிறையிலிருந்து வெளியாகும் ஜெயக்குமார்!
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, காரணமில்லாமல் நீக்கப்பட்ட நான், அன்வர் ராஜா, ஓ.ராஜா அனைவரும் வருங்காலத்தில் அதிமுகவை எப்படி எடுத்துச் செல்வது எல்லோரையும் எப்படி ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்தோம். சசிகலாவை எப்படி ஒருங்கிணைந்து கட்சியை கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆலோசித்தோம். ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுக்கின்றனர். இவர்களால் ஆயிரக்கணக்கான பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அத்துணை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு அணியாக மாநாடு விரைவில் போட உள்ளோம்.
அதேபோல் இபிஎஸ் ஓபிஎஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் தொடரும். எடப்பாடி பழனிசாமியை நீக்கினால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். ஈபிஎஸ் சொல்வதை கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் ஜால்ரா தட்டி வருகிறார். ஓபிஎஸ்-யிடம் நல்ல மனமும் இல்லை குணமும் இல்லை. எல்லோரும் இணைந்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஓபிஎஸ்-ஐ திட்டியும் பயனில்லை, குறை சொல்லியும் பயனில்லை, நேரம்தான் வேஸ்ட். இபிஎஸ் தான் அனைத்தையும் செயல்படுத்துகிறார். இரண்டு பேர் இணைந்து நாடகமாடுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், சட்டரீதியாக என்ன செய்யவேண்டும், எப்படி ஒன்றிணைய வேண்டும் போன்றவை ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக-வை காப்பதற்கு எல்லோரும் திரண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் படிக்க | ஆசிரியர்களின் கூடுதல் பணிச்சுமையை குறைக்க வேண்டும் - ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR