நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது, கள்ள ஓட்டுப் போட முயன்றதாக திமுக நபர் நரேஷ் என்பவரை பிடித்து அரைநிறுவானப் படுத்தி சாலையில் இழுத்துச் சென்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அவர்மீது அடுத்தடுத்து வழக்குகள் போடப்பட்டது. முதல் இரு வழக்குகளில், ஜாமீன் கிடைத்தும், அடுத்தடுத்த வழக்குகள் பதிவானதால் அவர் சிறையிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
முன்னதாக சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கை பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்து கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ்குமார் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக விளக்கமளித்த ஜெயக்குமார், இது குடும்ப தகராறு என்றும், அதில் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
மேலும் படிக்க | பாவம் போலீஸ்.. அவங்க பிரச்சனையை யார்தான் பேசுறது??
இவ்வழக்கில் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்ட அவர், ஜாமீன் கேட்டு அளித்த மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. பின்னர், 3வது வழக்கான இந்த நில அபகரிப்பு வழக்கில் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனுதாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி காவல்துறை தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 11-ந்தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜெயக்குமார் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, திருச்சியில் 2 வாரங்கள் தங்கியிருந்து காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும், திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனைகளை விதித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
இதனால், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஏற்கனவே 2 வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ள நிலையில் இன்று 3-வது வழக்கிலும் ஜாமின் பெற்றுள்ளதால் ஓரிரு நாட்களில் அவர் சிறைவாசத்திலிருந்து வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR