ராஜேந்திர பாலாஜிக்கு செக்: விரைவில் கைது செய்வோம்- சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
ராஜேந்திர பாலாஜியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆவின் உள்ளிட்ட அரசு நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் தெரிவிக்கப்பட்டது.
இவரை கைது செய்ய தனிப்படைகள் தீவிரம் காட்டி வரும் சூழலில் இவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் (Rajendra Balaji) வங்கி கணக்குகளையும் முடக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் 5 புகார்கள் வந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட காவல் துறை (TN Police) சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | ராஜேந்திர பாலாஜிக்கு அடுத்த ’செக்’..! லுக்அவுட் நோட்டீஸ் வழங்க திட்டம்
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது., ராஜேந்திர பாலாஜியை தேடும் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அவரை நெருங்கிவிட்டதாகவும் கூடிய விரைவில் கைது செய்வோம் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திரைப்பட தயாரிப்பாளருமான பழ. கருப்பையா கூறியதாவது., அமைச்சர் செந்தில்பாலாஜி, ராஜகண்ணப்பன் போன்று, ராஜேந்திர பாலாஜியும் திமுகவிற்கு வந்துவிட்டால் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும். என்ற பழ.கருப்பையா, அமைச்சர் செந்தில்பாலாஜியின் மீதுள்ள வழக்குகளை கண்டு கொள்ளாமல், ராஜேந்திர பாலாஜியை விரட்டுவது வேடிக்கையானது என்றும் கூறினார். பாஜகவை நீக்கி சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொண்டால், திமுகவிற்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுக்க முடியும் என்றும்,ஜெயலலிதா இருந்த போதே சசிகலாவை வைத்துதான் அதிமுக செயல்பாடு இருந்தது தற்போது சசிகலாவை யார் என்று அக்கட்சியினரே கேட்பது கேலிக்கூத்தானது என்றும் கூறினார்.
ALSO READ | ’பண மோசடி மட்டுமல்ல.. இன்னும் இருக்கு’ ராஜேந்திரபாலாஜி மீது குவியும் புகார்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR