வானிலை அறிவிப்பு: தமிழக கடலோர மாவட்டம் மற்றும் புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு
தென் தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தென்தமிழகத்தில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் கூறுகையில், வங்ககடலில் தென் கிழக்கு பகுதியில், இலங்கைக்கு கிழக்கே, காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி, தமிழக தென் மாவட்டங்களுக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் சில இடங்களில் இன்று (டிசம்பர் 22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையை பொருத்த வரை மிதமான மழை அல்லது வறண்ட வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக தெற்கு கடலோர பகுதிகளில் கன மழை ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் உள்ளன கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்றைய வானிலை பொருத்த வரை தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை.
சென்னை பொறுத்த வரை வானிளை பொதுவாக மேகமூட்டமாக இருக்கும். சில பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி முதல் குறைந்தபட்ச 23 டிகிரி வரை செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.