கோவையில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோவையில் நேற்று முன்தினமும், அதற்கு முந்தைய தினமும் பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் சாலைகளில் மழை நீர் சூழ்ந்ததாலும் பாலங்களுக்கு அடியில் மழை நீர் சூழ்ந்ததாலும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக சாய்பாபா காலனி - சிவானந்த காலனி சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் இரண்டு தினங்களில் இரண்டு பேருந்துகள் மாட்டிக் கொண்டது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் மழை வரும் போது மேம்பாலங்களுக்கு அடியில் செல்லலாமா வேண்டாமா என்பதை அறிந்து கொள்ளும் வகையில் பச்சை மஞ்சள் சிவப்பு வண்ணத்தில் கம்பங்கள் இருபுறங்களிலும் நடப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Chennai Rain Good News : சென்னை மக்களுக்கு குட் நியூஸ், கன மழை பயம் இனி வேண்டாம்


இந்த கம்பத்தில் மழை வரும் பொழுது பச்சை நிறம் தெரிந்தால் அனைத்து வாகனங்களும் செல்லலாம், மஞ்சள் நிறம் தெரிந்தால் கவனத்துடன் வாகனங்களை இயக்க வேண்டும். இரு சக்கர வாகனங்கள் இயக்குவது சிரமம், சிவப்பு நிறம் தெரிந்தால் எந்த வாகனங்களும் செல்லக்கூடாது என்ற அடிப்படையில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி மஞ்சள் நிறம் வரை நீரில் மூழ்கி சிவப்பு நிறம் தெரிந்தால் போக்குவரத்து காவலர்களே அப்பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி விடுவர். முதல் கட்டமாக பேருந்துகள் மாட்டிக்கொண்ட சாய்பாபா காலனி ரயில்வே தரைப்பாலத்தில் இந்த கம்பங்கள் நடப்பட்டுள்ள நிலையில்அனைத்து மேம்பாலங்களுக்கு அடியிலும் இது போன்ற கம்பங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


சென்னையில் மழை


சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி நீர் வரத்தானது நிரம்பி வருகிறது. இந்த நிலையில் சென்னை குடிநீர் ஆதாரமாக விளங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியின் நிலவரம் குறித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது ஏரியில் தண்ணீர் இருப்பு எவ்வளவு உள்ளது மதகுகள், செட்டர்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 


அப்போது செம்பரம்பாக்கம் ஐந்து கண் மற்றும் 19 கண் மதகில் இருந்த செட்டர்கள் இயக்கி காட்டப்பட்டதையடுத்து அவர் அதனை பார்த்து மதகின் உறுதி தன்மை குறித்து கேட்டறிந்தார். ஏரியில் தண்ணீரே இல்லை பீதியை கிளப்பி விட்டு விடுகிறார்கள் நவம்பர் மாசம் சர்வநாசம் என்றெல்லாம் சொல்லி விடுகிறார்கள் என அமைச்சர்களிடம் பேசியபடி ஆய்வு மேற்கொண்டார். மேலும் ஆய்வு குறித்து பேட்டி கேட்ட போது தண்ணீரே இல்லை என சிரித்தபடி அங்கிருந்து கிளம்பி சென்றார். இதில் அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன், நாசர், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் இருந்தனர்.


மேலும் படிக்க | Tamilnadu Trains Cancel Update : கனமழை எதிரொலி, ரயில் சேவை ரத்து குறித்து முக்கிய அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ