தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த விரும்புகிறாரா கமல்? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் வரும் மே 19-ஆம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அங்கு பிரசாரம் செய்தார்.
 
பிரச்சாரத்தின் போது., "முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னாள் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன்" என தெரிவித்தார்.


கமலின் கருத்திற்கு பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்பு குரல் எழுந்த நிலையில் தமிழகத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறுபான்மையினர் வாக்குகளை பெற விஷத்தை கக்கி வரும் கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் "யாரை திருப்தி படுத்த கமல் இவ்வாறு பேசி வருகின்றார்., யாரோ ஒருவர் பயங்கரவாதம் செய்தால் அதற்காக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் குறைகூறுவதா? என கேள்வி எழுப்பினார்


இந்நிலையில் தற்போது தமிழக அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்., தமிழகத்தில் விஷ விதைகளை விதைத்து கமல் குளிர் காய நினைக்கிறார். அமைதியாக இருக்கும் தமிழகத்தில் மதக்கலவரம் ஏற்படுத்த கமல் விரும்புகிறாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமைதி பூங்காவாக திகழும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை கெடுக்கும் வகையில் கமல் இவ்வாறு பேசக்கூடாது. கமல் நடித்த படங்களிலும் சரி, அரசியலிலும் நாகரீகம் என்பது இல்லை என கடுமையாக விமர்ச்சித்துள்ளார்.