Chennai Latest News Updates: விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்பதற்காக போக்குவரத்து காவல்துறை சார்பில் இன்று முதல் வருகின்ற ஆக. 26ஆம் தேதி வரை "ஜீரோ ஆக்சிடெண்ட் டே" (Zero Accident Day) என்ற தலைப்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் முதல் நாளான இன்று‌ போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.


5 ஓட்டுநர்களுக்கு விருது


இந்த நிகழ்ச்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எந்த ஒரு சிறு விபத்தும் ஏற்படுத்தாமல் வாகனத்தை இயக்கியதற்காக மாநகரப் போக்குவரத்து கழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து ஓட்டுநர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. போக்குவரத்தை விபத்தில்லா மாநகர போக்குவரத்தாக இயக்குவோம் என மாநகர போக்குவரத்து ஓட்டுநர்கள் உறுதி மொழி எடுத்தனர்.


நிகழ்ச்சியை தொடர்ந்து சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் சுதாகர் மேடையில் பேசினார். இன்னுயிர் காக்கும் திட்டத்தில் தொடர்ச்சியாக சென்னை போக்குவரத்து காவல்துறையில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.


மேலும் படிக்க | உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு? வந்து விழுந்த கேள்வி - டக்குனு ஸ்டாலின் சொன்ன பதில பாருங்க


ஜீரோ ஆக்ஸிடென்ட் டே


உலகத்தில் இருக்கக்கூடிய மற்ற மாநகரங்களில் விட சென்னையை சிறப்பாக கொண்டுவதற்கான முயற்சிகளில் ஒன்று இந்த 'ஜீரோ ஆக்ஸிடென்ட் டே' ஆகும். சென்னையில் ஏதோ ஒரு நாள் விபத்து இல்லை என்ற சூழல் ஏற்படுமானால், அதுதான் ஜீரோ ஆக்ஸிடென்ட் டே. இதில் வெற்றி பெறலாம், வெற்றி பெறாமலும் இருக்கலாம், இது ஒரு முயற்சி. இந்த முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றால் சென்னையில் இருக்கக்கூடிய அனைத்து வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.



பெரிய வாகனம் என்று பார்த்தால் எம்டிசி வாகனங்கள்தான் (மாநகர பேருந்துகள்). அதனால் தான்  இதில் இருந்து இந்த விழிப்புணர்வை ஆரம்பித்திருக்கிறோம். ஜீரோ என்றாலே எல்லாரும் கேவலமாக தான் நினைப்பார்கள், ஜீரோவின் அருமை இப்போதுதான் புரிகிறது.


லஞ்சமும் பூஜ்யம் ஆகும்


ஜீரோ விபத்து என்றால் விபத்தை பூஜ்ஜியம் ஆக்குவததோடு மட்டுமில்லாமல் ஜீரோ அபராதம்; ஜீரோ சலான்; ஜீரோ விதிமீறல் ஆகியவற்றையும் இது உள்ளடக்கியது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.  இவ்வாறு விபத்து, விதிமீறல், அபராதம் என அனைத்தையும் ஜீரோ என்ற நிலைக்கு கொண்டு வரும்போது சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறையில் லஞ்சமும் ஜீரோ ஆகும். 


இத்தனை தொடர்ந்து 300 பள்ளிகள், அதேபோல ஐடி கம்பெனிகள், லாரி ஓட்டுநர்கள், மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் 20 நாள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம். சென்னையில் விபத்து ஏற்படமால் தடுக்க முடியும் என மற்ற நகரத்துக்கு காட்டுவோம்" என பேசினார். 


மேலும் படிக்க | தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு


இன்று முதல் விழிப்புணர்வு


தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,"இன்னுயிர் காப்போம் திட்டம் தொடர்ந்து தற்போது வருகின்ற ஆகஸ்ட் 26ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடெண்ட் டே கடைப்பிடிக்க உள்ள நிலையில் இன்று அதன் அறிமுக விழா நடைபெற்றுள்ளது.விபத்தில்லா சென்னையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இன்று முதல் 20 நாட்களுக்கு தொடர் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சிகள் சென்னை போக்குவரத்து காவல்துறை சார்பில் நடத்தப்பட உள்ளது. 


இந்த விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வின் முதலாவது நாளான இன்று சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் ஓட்டுநர் நடத்துநர் ஊழியர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு பிரச்சார நிகழ்வு நடைபெற்று உள்ளது. நாளை பள்ளிகளிலும், நாளை மறுநாள் முதல் வாடகை கார் ஓட்டுநர்களுக்கு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, கல்லூரி மாணவர்களுக்கு, குடியிருப்பு சங்கங்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொள்ள உள்ளோம். 



இந்த ஆகஸ்ட் மாதத்தை சென்னைக்கு ஒரு சிறந்த மாதமாக கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து காவல்துறை முயற்சி எடுத்துள்ளது. சென்னையில் உள்ள ஒவ்வொருவரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று என் மூலம் விபத்து ஏற்படாது, போக்குவரத்து விதிமுறைகளுக்கு உட்பட்டு தான் வாகனம் ஓட்டுவேன் என உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும். விபத்தில்லா சென்னையை உருவாக்க பொதுமக்கள் ஒவ்வொருவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். 


சென்னையில் நடக்கும் விபத்துகள்


சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம், மாநகராட்சி, இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்டவை இணைந்து எந்த நேரங்களில் எந்த வாகனங்கள் செல்லலாம் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து விபத்துக்கள் ஒரு நாள் அதிகமாகவும், ஒரு நாள் குறைவாகவும் ஏற்படுகிறது. இதை முற்றிலும் குறைக்க வேண்டும் என்ற நோக்கில் போக்குவரத்து காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 


ஹெல்மெட் கம்ப்ளைன்ட் நாள், சிக்னல் கம்பளைண்ட் நாள் உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்ற ஆகஸ்ட்  26ஆம் தேதி ஜீரோ ஆக்ஸிடென்ட் டே கடைப்பிடிக்க உள்ளது. சென்னையில் ஒரு மாதத்திற்கு 40 முதல் 50 பேர் போக்குவரத்து விபத்துக்கு உள்ளாகின்றனர். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு விபத்துக்கள் சென்னையில் நடைபெறுகிறது. நான்-பெடல் ஆக்சிடென்ட் (Non-Pedal Accident) ஒரு நாளைக்கு நான்கு முதல் ஐந்து விபத்துக்கள் நடைபெறுகிறது.


சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் சாலைகள் விரிவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து விதிமீறல் அபராத தொகை உயர்த்தியுள்ளதன் காரணமாக சென்னையில் 90 சதவீதம் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கின்றனர்.


அபராதம் விதிக்கும் கேமராக்கள்


சென்னையில் சாலைகளில் நிறுத்தும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க புதிய திட்டம் கொண்டுவரப்படும். புதிய திட்டத்தின் மூலம் விபத்து ஏற்பட்டுள்ள இடத்தில் விபத்து படத்தை வரைவது, சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்களை காவல்துறை பிடிப்பதற்கான பணிகளும் இதில் கொண்டுவரப்படும். 


அடுத்த வருடம் இறுதியில் 165 சாலை இணைப்புகளில் அதிநவீன சிசிடிவி கேமரா (போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கும்) பொருத்தப்படும். தற்போது 34 சாலை இணைப்புகளில் (போக்குவரத்து விதிமீறல் அபராதம் விதிக்கும்) சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு செயல்பாட்டில் உள்ளது" என்றார். இதன்மூலம், சென்னை முழுவதும் வைக்கப்பட்டுள்ள Zero Is Good என்ற பேனருக்கான அர்த்தம் என்பது சென்னையில் விபத்தை பூஜ்யமாக்கும் முயற்சிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பிரச்சாரம் என தெரிகிறது. 


மேலும் படிக்க | இந்தியாவின் நம்பர் ஒன் மாநகராட்சியாகும் நெல்லை - புதிய மேயர்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ