சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் (April 6) ஆறாம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்குகள் மே 2 ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் திமுக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான அ.தி.மு.க. தோல்வி அடைந்தது. கடந்த 10 வருடமாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., இந்தமுறை ஆட்சிக்கு வந்துள்ளது. வரும் மே 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கிறார். கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பதவி ஏற்பு நிகழ்ச்சி எளிய முறையில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளின் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் அடுத்த நாள் (May 3) வெளியிட்டது. அதில், அரசியல் கட்சிகள் வெற்றி பெற்ற இடங்கள், தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் மற்றும் அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் போன்ற விவரங்களை வெளியிட்டது.


ALSO READ |  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7ம் தேதி முதல்வராக பதவி ஏற்கிறார்


234 தொகுதிகளின் வெற்றி விவரங்கள்: 


தி.மு.க. : 133
அ.தி.மு.க. : 66
காங்கிரஸ் : 18
பா.ம.க. 5
பா.ஜ.க. 4 
விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 
இந்திய கம்யூனிஸ்டு கட்சி: 2 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி: 2 


2021 தமிழக தேர்தலில் மொத்தம் பதிவான ஓட்டு சதவீதம்: 


மொத்தம் பதிவான ஓட்டு = 4,62,18,698


நோட்டா = 3,45,538


பிறர் (சுயாட்சி வேட்பாளர், மற்ற சிறு கட்சிகள்) = 8,09,940


தி.மு.க கூட்டணி = 2,09,82,009  


அ.தி.மு.க கூட்டணி = 1,83,63,258


அ.ம.மு.க கூட்டணி = 13,17,256


ம.நீ.ம கூட்டணி = 12,57,397


நா.த.க = 30,41,974


பகுஜன் சமாஜ் = 1,01,326


ALSO READ | அம்மா உணவகத்தில் தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது சட்டப்படி நடவடிக்கை: மு.க.ஸ்டாலின் உத்தரவு


அரசியல் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் (மொத்தம் 234 தொகுதிகள் 100%)


1. திமுக (133 இடங்களில் வெற்றி) = 56.83%


2. அதிமுக (66 இடங்களில் வெற்றி)  = 28.20%


3. காங்கிரஸ் (இடங்களில் வெற்றி)= 7.69%


4. பாமக (5 இடங்களில் வெற்றி) = 2.13%


5. பாஜக (4 இடங்களில் வெற்றி = 1.70%


6. வி.சி.கே (4 இடங்களில் வெற்றி) = 1.70%


7. சிபிஐ (2 இடங்களில் வெற்றி) = 0.85%


8. சிபிஎம் (2 இடங்களில் வெற்றி) = 0.85%


ALSO READ |  வாக்களித்த மக்களுக்கு நன்றி, படிப்படியாக வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்: மு.க. ஸ்டாலின்


வாக்கு சதவீத பகிர்வு அடிப்படையில் நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. நாம் தமிழர் கட்சி, அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. பா.ம.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கீகாரம் பெற்ற கட்சிகளாக மாறியுள்ளன. அதேபோல வெற்றி பெற்ற இடங்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR