சென்னை: சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து இன்று 1.23 கோடி மதிப்புள்ள தங்கமும், 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டது.இது தொடர்பாக பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார். இதேபோல் நேற்றும் சென்னை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடமிருந்து சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் கைப்பற்றப்பட்டது.


கடந்த வாரம், இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு படகு மூலம் கடத்தி வரப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது.இப்படி தொடர்ந்து சில நாட்களாக தமிழகத்தில் கடல் மார்க்கமாகவும், விமானம் மூலமாகவும் தங்கம் கடத்தப்படுவதன் காரணம் என்ன? தங்கத்தின் விலை அதிகரிப்பு, பொருளாதார சிக்கல்கள், கொரோனா தொற்றுநோய் பரவல் என அடிப்படையாக பல காரணங்கள் இருக்கின்றன.

 

தங்கக் கடத்தலுக்கு பின்னால் மிகப்பெரிய அரசியலும், விஷயங்களும் இருக்கின்றன.வேறொரு நாட்டில் இந்து தங்கத்தை கடத்தி வருவதற்கான ஒரு காரணமாக நாட்டுக்கு நாடு மாறுபடும் வரி விகிதம் என்பதைச் சொல்லலாம். ஆனால், போதை மருந்து, பணப் பரிமாற்றம், லஞ்சம் என பல்வேறு பரிணாமங்களும் தங்கக்கடத்தல்கலின் பின்னணியில் இருக்கின்றன. ஆனால் பயணிகள் தங்கம் கடத்துவது என்பது கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.  

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR