புதுடெல்லி: அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் என்பது அணுக்கழிவு அல்ல என்று மத்திய அமைச்சர் கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கூடங்குளம் அணு ஆலையின் நான்காவது அணு உலைகளின் கழிவுகளை பாதுகாப்பது தொடர்பாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ள இந்த கருத்து கவலைகளை எழுப்பியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவுகள் (Nuclear Wastage), அந்த வளாகத்திலேயே சேமித்து வைக்கப்படும் என்றும், அவற்றை சேமித்து வைப்பதற்காக மாற்று இடம்  எதுவும் தேர்வு செய்யப்படவில்லை என்றும் மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


நாடாளுமன்ற மாநிலங்களவையில் நேற்று கூடங்குளம் அணுக்கழிவு பற்றிய கேள்வி எழுப்பப்பட்டபோது மத்திய அமைச்சர் இவ்வாறு பதிலளித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரின் பதில் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது.


கூடங்குளத்தில் அமைக்கப்படவுள்ள மூன்றாவது மற்றும் நான்காவது அணு உலைகளின் கழிவுகள், அந்த வளாகத்திலேயே சேமித்து வைப்பதை தவிர்க்கும் வகையில் மாற்றுத் திட்டம்  ஏதேனும் அரசிடம் உள்ளதா என்ற கேள்வி பல சமூக ஆர்வலர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அவசியமா?


இந்தக் கேள்வியை பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் கேட்டபோது, அணு உலையில் பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருள் என்பது அணுக்கழிவு அல்ல என்று தெரிவித்தார்.  மேலும், அணுக்கழிவு என்பது அடுத்தக்கட்டத்தில் பயன்படுத்துவதற்கான எரிபொருளை தயாரிப்பதற்கான  விலைமதிப்பற்ற ஆதாரம் என்றும் தெரிவித்தார்.


அணுக்கழிவுகளை மறுபயன்பாட்டுக்கு தயார்படுத்துவதற்காக அதற்கென உள்ள அமைப்புக்கு  அனுப்பப்படும் வரை அணு உலை வளாகத்திலேயே, அணு உலையிலிருந்து சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள  பயன்படுத்தப்பட்ட அணு எரிபொருளுக்கான சேமிப்புக் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்று  அமைச்சர் தெரிவித்தார்.


கூடங்குளம் அணு சக்தி வளாகத்திலேயே (Koodankulam Power Plant) அணுக்கழிவுகள் வைக்கப்பட்டிருப்பதால், அப்பகுதியில் வாழும் மக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக்கு ஏற்படுகிறது. இது தொடர்பாக மத்திய அரசு  என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர், கூடங்குளம் அணுசக்தி திட்ட வளாகத்தில், பயன்படுத்த அணு எரிபொருட்களை சேமித்து வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்பு பாதுகாப்பானதே என்று உறுதியளித்தார்.


நிலநடுக்கம், சுனாமி  உள்ளிட்ட இயற்கைப் பேரிடர்களை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சேமிப்பு கட்டமைப்பானது, பொதுமக்கள், அணுசக்தி வளாக பணியாளர்கள், சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய பணியாளர் நலன் மற்றும் பிரதமர் அலுவலக விவகாரத்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.


READ ALSO | அணுக்கழிவு மையம் ஆபத்தானதா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR