நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும் என்றும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு ‘நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்’ என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்தவேண்டும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகைக் கடன் தள்ளுபடி குறித்த தமிழக அரசின் அறிவிப்பில் இன்னும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. அதில் உள்ள நிபந்தனைகளைத் தளர்த்த வேண்டும், ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 5 பவுனுக்கு மேல் நகைக் கடன் வைத்திருந்தாலும் அவர்களையும் தள்ளுபடிக்கான நபர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் பயிர்க் கடன்கள், நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்போது பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவர்களுக்கு நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | புத்தகப் பூங்கா அமைப்புக் குழுவில் எழுத்தாளர்களையும் இணைப்பது அவசியம்: தசிஎகச வலியுறுத்தல்



வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் திமுக அரசு புதுப்புது நிபந்தனைகளைப் புகுத்துவதாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நகைக் கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரையில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், ஏழை எளிய மக்களுக்காகத் தமிழக அரசு விதிகளைத் தளர்த்திக்கொள்ள வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் விஜயகாந்த், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அரசாணையைத் திருத்தி வெளியிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். 



இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ''நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து திமுக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். 5 பவுன் வரை கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் நேரத்தில் மக்களை ஏமாற்ற கவர்ச்சியாக அறிவித்த திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனைச் செயல்படுத்தாமல் புதுப்புது நிபந்தனைகளைப் போடத் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகின்றன. இதனால் 5 பவுன் வரையிலான நகைக்கடன் தள்ளுபடி என்பதில் திமுக அரசு நம்பிக்கை துரோகத்தை அரங்கேற்றத் திட்டமிட்டிருக்கிறதோ என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. எனவே, நகைக்கடன் தள்ளுபடியில் அரசின் நிலைப்பாடு என்ன என்பதை தெளிவாக அறிவிக்க வேண்டும். மேலும், தள்ளுபடி கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் காத்திருப்போருக்கு ‘நகையை மீட்காவிட்டால் ஏலம் விடப்படும்’ என நோட்டீஸ் அனுப்புவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | ‘டெபாசிட்’ பணத்தைக் கேட்ட தமிழக அரசு... வட்டியுடன் கொடுத்த நீதிமன்றம்.!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR