கவர்னர் முடிவு என்ன? ஓ.பி.எஸ்? எடப்பாடி? 356? திமுக?
அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பதால் அவர் முதல் அமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் நேற்று கடிதம் கொடுத்துள்ளார்.
சென்னை: அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட சசிகலாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு இருப்பதால் அவர் முதல் அமைச்சராக முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் ஆட்சி அமைக்க உரிமை கோரி கவர்னரிடம் நேற்று கடிதம் கொடுத்துள்ளார்.
அதே நேரத்தில் தமிழகத்தின் முதல் அமைசசர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கும் ஆதரவு இருப்பதாக கூறி ஆட்சி அமைக்க உரிமை கோரி வருகிறார். இவர்கள் இருவரில் ஒருவரை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டிய கட்டாயம் கவர்னருக்கு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சசிகலாவும், ஓ.பன்னீர் செல்வமும் உரிமை கோரிய நேரத்தில் கவர்னர் இது சம்பந்தமாக முடிவு எடுக்க முடியாமல் இருந்தார். சசிகலா மீதான வழக்கில் தீர்ப்பு வருவதால் தான் அவர் இதில் முடிவு எடுக்காமல் தள்ளிப்போடுவதாக கூறப்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமி தனக்கு போதிய ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாக கடிதம் கொடுத்து இருப்பதால் கவர்னர் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சிறை வைக்கப்பட்டு இருப்பதாக ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் புகார் கூறுவதால் கவர்னர் கவனத்துக்கு எடுத்து கொள்ளலாம். அதே நேரத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு 117 எம்.எல்.ஏ.க்கள் அதரவு இருப்பதாக அதரவு கடிதம் கொடுத்தால் ஓ. பன்னீர்செல்வத்தை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருமே மெஜாரிட்டியை நிரூபிக்க தவறிவிட்டால். திமுக-வை ஆட்சி அமைக்க அழைக்கலாம்.
எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் இருவரும் மெஜாரிட்டியை நிரூபிக்க தவறி விடும் அதே நேரத்தில் திமுக-வுக்கும் அவர்கள் ஆதரவு தெரிவிக்காவிட்டால் கவர்னர் 365 விதியின்படி இடைக்காலமாக ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம்.
ஓ. பன்னீர்செல்வத்துக்கு வாய்ப்பு வழங்கி நம்பிக்கை வாக்கெடுப்பில் ஓ. பன்னீர்செல்வம் தோற்றுவிட்டால், 356 என்ற ஆட்சிக் கலைப்பு கவர்னர் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.