எப்போது தான் உள்ளாட்சி தேர்தல்...? தமிழக அரசு சொன்ன பதிலை பாருங்க!
Tamil Nadu Latest News Updates: ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதில் அளித்துள்ளது.
Tamil Nadu Latest News Updates: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் வரும் ஜனவரி மாதத்தோடு முடிவடைய உள்ளன. இந்நிலையில், வார்டு எல்லை மறு வரையறை பணிகளை முடிக்க உத்தரவிடக் கோரி, முனியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், உள்ளாட்சி அமைப்புகளில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் மகளிருக்கு ஒதுக்கப்படும் வார்டுகள் குறித்து முடிவு செய்த பிறகே உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை வெளியிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் பி.தனபால் அடங்கிய அமர்வில் இன்று (டிச. 21) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் மற்றும் மாநில தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ஆகியோர், "வார்டு மறு வரையறை மற்றும் மதிப்பீட்டு பணிகள், பட்டியல் இனத்தவர், பழங்குடியினர், மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து முடிவு செய்யாமல், உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட மாட்டாது" என உத்தரவாதம் வழங்கினர். இதனை நீதிபதிகள் பதிவு செய்துகொண்டனர். மேலும், இந்த வழக்கை முடித்து வைத்தும் உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க | ஈரோடு இடைத்தேர்தலில் திமுக போட்டியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தல்
கடந்த 2019ஆம் ஆண்டு திருநெல்வேலி, விழுப்புரம், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு முறையே தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அதாவது பெரிய மாவட்டங்களாக இருந்தவற்றை நிர்வாக காரணங்களாக தமிழ்நாடு அரசு பிரித்து, தனி தனி மாவட்டங்களாக மாற்றப்பட்டன.
வார்டு மறுவரையறை பணிகளை மேற்கொள்ள வேண்டி இருந்ததால் இந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து கடந்த 2019ஆம் ஆண்டி டிசம்பரில், மீதம் இருந்த 27 மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் திமுக 55% இடங்களையும், அதிமுக 45% இடங்களையும் கைப்பற்றின. தொடர்ந்து, 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சியமைத்தது.
2022ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சித் தேர்தல்
இதையடுத்து, 2022ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட மேலே குறிப்பிட்ட 9 மாவட்டங்களில் மட்டும் ஊரக, உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி, அப்போதே தமிழ்நாடு முழுக்கவும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலும் நடத்தப்பட்டது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 27 மாவட்டங்களின் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றியடைந்த பிரதிநிதிகளின் பதவிக்காலமே வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 5ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
2027ஆம் ஆண்டில் தான் உள்ளாட்சித் தேர்தலா?
எப்போதும் தேர்தலுக்கு 45 நாள்களுக்கு முன்னரே அறிவிப்பாணையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுவிடும். ஆனால், தேர்தல் ஆணையம் அதுகுறித்து எவ்வித அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கு ஏதும் தனி திட்டம் வைத்திருக்கிறதா என்றும் பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இரண்டையும் ஒன்றாக 2027ஆம் ஆண்டிலேயே நடத்த அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கூறின. அதுமட்டுமின்றி, இதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமிக்கவும் அவசர சட்டம் தமிழக அரசு கொண்டுவர இருப்பதாகவும் கூறப்பட்டு வந்தது.
தற்போது தமிழ்நாடு அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது அளிக்கப்பட்டுள்ள பதிலை வைத்து பார்த்தோமானால் மொத்தமாக 36 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி ஆகியவற்றின் தேர்தல் 2027ஆம் ஆண்டு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026ஆம் ஆண்டில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | விஜய் பாஜகவை எதிர்ப்பதற்கு காரணம் இதுதான்... ஹெச். ராஜா சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ