Two Leaves Symbol Case Latest Update: இரட்டை இலை தொடர்பான வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. அதாவது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என அளிக்கப்பட்ட மனு ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி குறித்து பார்ப்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதாவது அதிமுகவின் உட்கட்சி விவகாரம் தொடர்பாகவும், கட்சி சட்ட திட்டங்களுக்கு விரோதமாக செயல்பட்ட தொடர்பாகவும் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு, கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2022 ஆண்டு வரைக்கும் பல்வேறு புகார்கள் அளித்திருந்தார். 


அதிலும் குறிப்பாக உட்கட்சி விவகாரம் உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக தாக்கல் செய்திருக்கும் உரிமையல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரைக்கும் அதிமுகவுக்கு அந்த இரட்டை இலை சின்னம் ஒதுக்க கூடாது என்று ஏற்கனவே தலைமை தேர்தல் ஆணையத்திற்கு ஒரு மனு அளித்திருந்தார். 


ஆனால் அந்த மனு மீது இதுவரைக்கும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே அந்த மனு மீதான தலைமை தேர்தல் ஆணையத்தின் நிலைப்பாடு என்ன? என்பதை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்க செய்திருந்தார். 


இன்று இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சி.குமரப்பன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கடந்த பிப்ரவரி மாதம் கொடுத்த இந்த மனு மீது இதுவரைக்கும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று தேர்தல் ஆணையத்திடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். 


இந்த மனு மீது இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை மீண்டும் டிசம்பர் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. 


அதிமுகவினுடைய பிரதான சின்னமான இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் ஒரு முக்கிய நகர்வு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க - தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக சார்பில் விஜய் வைத்துள்ள கோரிக்கை!


மேலும் படிக்க - உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்! தொண்டர்களுக்கு ட்வீட் போட்ட துணை முதல்வர்


மேலும் படிக்க - திமுகவிடம் பணம் வாங்கியது உண்மைதான் - திண்டுக்கல் சீனிவாசனுக்கு முத்தரசன் பதிலடி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ