இன்று நவம்பர் 25ம் தேதி சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக கட்சியின் தலைவர் தளபதி விஜய், X தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பிற்கு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும் செய்திகள் துயரம் அளிக்கின்றன.
மேலும் படிக்க | 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை, ஆரஞ்சு அலெர்ட் வந்தாச்சு - உஷார் மக்களே
பெண்கள் மீதான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தடுக்க, நீதித் துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு, அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு யோசனை தெரிவித்துள்ளது. இதற்கு மதிப்பளித்து, தமிழக அரசு தனி இணையத்தளத்தை உருவாக்கி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பெண்களின் முன்னேற்றம், முன்பை விட நம்பிக்கை அளிப்பதாக இருந்தாலும், அவர்களுக்கான பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே இருக்கிறது. பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வதாக வரும்…
— TVK Vijay (@tvkvijayhq) November 25, 2024
மாற்றுக்கட்சியில் இருந்து தவெகா-வில் இணைந்த தொண்டர்கள்
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கல்புதூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாற்றுக் கட்சியிலிருந்து இணையும் நிகழ்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நிகழ்ச்சி வேலூர் மாவட்டம் காட்பாடி மற்றும் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஏ.நவீன் குமார் தலைமையில் காட்பாடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் சாரங்கன் மற்றும் கருணாகரன் இப்ராஹிம் சுதா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வேலூர் காட்பாடி ராணிப்பேட்டை ஆற்காடு மேல்விஷாரம் ஆம்பூர் வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் அக்கட்சிகளில் இருந்து விலகி தங்களை தமிழக வெற்றிக் கழக மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் ஜே.தாஹிரா முன்னிலையில் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்
மேலும் இதனைத் தொடர்ந்து புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் காட்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்டோர் தங்களை தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | சிறப்பான கடன் திட்டம்... மானியத்தையும் அள்ளிவீசும் தமிழக அரசு - யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ