சுபஸ்ரீ விவகாரத்தில் யார் மீது பழி சொல்ல வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர் என நடிகர் விஜய், அரசை மறைமுகமாக விமர்சித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அட்லீ, விஜய் கூட்டணியின் மூன்றாவது முறையாக உருவாகியுள்ள திரைப்படம் 'பிகில்'. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. விழாவில் பேசிய விஜய் தெரிவிக்கையில்., வாழ்க்கையும் ஒரு கால்பந்து போட்டி தான். நாம் கோல் போடுறதையும் தடுக்க ஒரு கூட்டம் இருக்கும். நம் கூட இருப்பவர்களே சேம்சைடு கோல் போடுவார்கள். யாருடையும் அடையாளத்தை எடுத்துக்கொள்ளாதீர்.


உழைத்தவர்களை மேடை ஏற்றி அழகு பார்க்கும் முதலாளி, ரசிகர்கள் தான். எதிரியாக இருந்தாலும் அவரை மதிக்க வேண்டும். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால் விளையாட்டில் அரசியலை கொண்டு வராதீர்கள்.


பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு எனது ஆறுதல். யார் மீது பழி கூற வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு லாரி டிரைவர் மீதும், பேனர் அச்சடித்தவர்கள் மீதும் பழி போடுகின்றனர். யாரை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவர்களை அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாக இருக்கும். 


இது போன்ற சமூக பிரச்னைக்கு 'ஹேஷ் டேக்' போட வேண்டும். சமூக வலை தளங்களை நல்ல விஷயங்களுக்காக பயன்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு பேசியுள்ளார்.


பேனர் கலச்சாரத்தால் இறந்த சுபஸ்ரீ குறித்து விஜய் கூறிய கருத்திற்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இசை வெளியீட்டு விழாவை விஜய் மிகச் சரியாக பயன்படுத்தியுள்ளார் என சென்னையில் கமல் ஹாசன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.