கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாடு முழுதும் தீயாய் பரவி வருகிறது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் ஒரு நாள் தொற்றின் அளவு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், தமிழகத்தில் (Tamil Nadu) ஒரு உள்ள ஒரு கிராமமே கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த கிராமமே தற்போது கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


மரக்கோட்டை எனப்படும் இந்த கிராமம், தமிழகத்தின் ஓமலூர் அருகே கருவள்ளி கிராம பஞ்சாயத்தில் உள்ளது. இந்த கிராமத்தில், 79 வீடுகள் உள்ளன, அவற்றில் 383 குடும்பங்கள் வாழ்கின்றன. 


கிராமத்தில் வசிப்பவர்களில் பெரும்பாலோர் வேலைக்காக கர்நாடகா போன்ற பிற மாநிலங்களுக்குச் செல்கிறார்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கடயம்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தின் மூத்த மருத்துவர் சாது பக்காதா சிங், சில நாட்களுக்கு முன்பு, பெங்களூரிலிருந்து கிராமத்திற்கு திரும்பிய நான்கு பேர் புதன்கிழமை காய்ச்சல் மற்றும் பிற கோவிட் -19 (COVID-19) அறிகுறிகள் இருப்பதாக புகார் அளித்ததாகத் தெரிவித்தனர். ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யப்பட்ட பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 


ALSO READ: இது அன்னதானம் அல்ல, ஆக்ஸிஜன் தானம்: மனதை உருக்கும் குருத்வாராவின் தனித்துவமான சேவை


அந்த நபர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கும் பின்னர் மருத்துவர்கள் ஸ்வாப் பரிசோதனையை செய்தனர். அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சனை, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில் 12 பேருக்கு தொற்று உறுதியானது.


உடனடியாக, கடயம்பட்டி தாலுகாவில் மருத்துவர்கள் ஒரு மருத்துவ முகாமை அமைத்து, மீதமுள்ள கிராம மக்களுக்கும் சோதனைகளை மேற்கொண்டனர். கிராமத்தை மற்ற கிராமங்களுடன் இணைக்கும் வீதிகள் அடைக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வருவாய் மற்றும் காவல்துறை உதவியாளர்களின் உதவியுடன், சுகாதாரத் துறையால் கிராமத்தில் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடிந்தது. வெள்ளிக்கிழமை, மேலும் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனுடன் அந்த கிராமத்தில் கொரோனா தொற்றால் (Coronavirus) பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இன்னும் சிலரது பரிசோதனை முடிவுகள் இன்று வரவேண்டியுள்ளது என கிராம நிர்வாக அதிகாரி சவுரி ராஜன் தெரிவித்தார். கிராமம் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, கிருமி நீக்கம் செய்யப்பட்டு மருத்துவர்கள் தொடர்ந்து கிராம மக்களை கண்காணித்து வருகின்றனர்.


இதற்கிடையில், தமிழ்நாட்டில் வியாழக்கிழமை 12,652 பேர் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 59 பேர் உயிரிழந்தனர். 7,526 நோயாளிகள் குணமடைந்தனர். சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 89,428 ஆக உள்ளது. தமிழகத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 10.37 லட்சத்தை எட்டியுள்ளது. இறந்தாவர்களின் எண்ணிக்கை 13,317 ஆக உள்ளது. தமிழகத்திலேயே சென்னையில் மிகவும் அதிகப்படியாக நேற்று 3,789 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். செங்கல்பட்டில் 906, கோவையில் 689, திருவள்ளூரில் 510 பேர் பாதிக்கப்பட்டதாக சுகாதாரத் துறை தரவுகள் தெரிவிக்கின்றன. சேலம் உட்பட ஏழு மாவட்டங்களில் 300-க்கும் மேற்பட்டோர் நேற்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ALSO READ: உடனடியாக தமிழகத்துக்கு 20 லட்சம் தடுப்பூசிகள் தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR