நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை: பிரதமர் மோடி

பலவித அச்சங்களும், சந்தேகங்களும் சூழ்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி சற்று முன்பு நாட்டு மக்களுடன் உரையற்றினார். பிரதமர் என்ன அறிவிக்கப் போகிறார் என்ற ஆர்வமும், அச்சமும் நிறைந்திருந்த நிலையில், பல பொதுவான அறிவுறுத்தல்களையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பிரதமர் நாட்டு மக்களிடம் முன்வைத்தார்.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 20, 2021, 09:39 PM IST
நாட்டில் தற்போதைக்கு முழு ஊரடங்கு அவசியமில்லை: பிரதமர் மோடி title=

9:12 PM 4/20/2021
கொரோனாவுக்கு எதிரான போரில் கடைசி ஆயுதம் தான் முழு ஊரடங்கு ஆகும்


9:07 PM 4/20/2021
அச்சத்தின் சூழல் குறையவும், வதந்திகள் பரவாமல் இருக்கவும் மக்கள்தான் உதவ வேண்டும். நண்பர்களே, இன்று நவராத்திரியின் கடைசி நாள். நாளை ராம நவமி. நாம் தேவையான நடவடிக்கைகளை எடுத்து ராமர் ராவணனை வென்றதுபோல், இந்த தொற்றை நாம் வெல்ல வேண்டும்.


9:06 PM 4/20/2021

லாக்டவுன் பற்றிய பேச்சுக்கே இடமில்லை. நாம் அந்த கட்டத்தைத் தாண்டி வந்துவிட்டோம். தேவைப்பட்டால் மட்டும் வீட்டை விட்டு வெளியே வரவும். தைரியத்துடனும், விழிப்புணர்வுடனும், பாதுகாப்புடனும் நாம் கொரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெர்றி பெறலாம்.


9:05 PM 4/20/2021

நமது கடமைகளை சரியாக செய்து, தடுப்பூசி செயல்முறையை வெற்றியடையச் செய்ய வேண்டும். அனைவரும், பாதுகாப்பாக இருங்கள், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடித்து, கொரோனா தொற்று பரவலை தடுக்கவும், தொற்றுக்கு எதிரான போரில் வெற்றி பெறவும் உங்கள் உதவி நாட்டுக்குத் தேவை


9:04 PM 4/20/2021
தொழிலாளர்கள் இருக்கும் இடத்திலேயே தங்குமாறு மாநில அரசுகளை கேட்டுக்கொள்கிறேன். தொழிலாளர்களுக்கு மாநிலங்கள் அளிக்கும் இந்த நம்பிக்கை அவர்களுக்கு உதவும், மேலும் அவர்கள் இருக்கும் நகரத்தில் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்: பிரதமர் மோடி


9:00 PM 4/20/2021
இரண்டு 'இந்தியாவில் தயாரிக்கப்பட்ட' தடுப்பூசிகள் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கின. தற்போது வரை, 12 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்: பிரதமர் மோடி


8:59 PM 4/20/2021
மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சில நகரங்களில், பெரிய COVID19 அர்ப்பணிப்பு மருத்துவமனைகள் கட்டப்பட்டு வருகின்றன: பிரதமர் மோடி


8:59 PM 4/20/2021
சில மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த பகுதிகளில் உள்ளவர்கள் எங்கும் செல்ல வேண்டாம் என அரசுகள் கேட்டுக்கொள்கின்றன. சில நாட்களில் தடுப்பூசிகளிம் போடப்படும் என்பதால், யாரும் இருக்கும் இடத்தை விட்டு வேறு எங்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.


8:58 PM 4/20/2021
சென்ற ஆண்டு நமக்கு இந்த தொற்று புதியதாக இருந்தது. அப்போது நம்மிடம் இதை எதிர்த்து போராட் ஒரு ஆயுதமும் இல்லை. இப்போது, நம்மிடம் இதற்கான மருந்து உள்ளது, தடுப்பூசிகள் உள்ளன, வழிமுறைகள் உள்ளன. ஆகையால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை.


8:57 PM 4/20/2021
இன்றுவரை நாம் வைரசை எதிர்த்து கண்டுள்ள வெற்றியில் முக்கிய பங்கு பொதுமக்களாகிய உங்களை சார்ந்தது. மக்கள் அனைத்து விதமான தொற்டு எதிர்ப்பு நடவடிக்கைகளிலும் முழு மனதுடன் ஈடுபடுகிறார்கள். மக்கள் இன்னும் முன்வந்து இந்த போரை வெல்ல உதவ வேண்டும். இளைஞர்கள் தங்கள் பகுதிகளில் சிறிய அமைப்புகளை ஏற்படுத்தி, கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இபப்டி செய்தால், ஊரடங்குக்கான தேவை கூட ஏற்படாது.


8:56 PM 4/20/2021
கொரோனா காலத்தில் மக்களின் சேவைக்காக தங்கள் வசதிகளைப் பற்றி கவலைப்படாமல் உழைக்கும் அனைத்து முன்னணிப் பணியாளர்களுக்கும், மருத்துவ பணியாளர்களுக்கும் கோடான கோடி நன்றி.


8:55 PM 4/20/2021
நோய்த்திற்றால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாட்டு மக்களின் சார்பில் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


8:55 PM 4/20/2021
கொரோனா வைரசுக்கான தடுப்பூசி செயல்முறையில் நாம் இப்போது பன்மடங்கு முன்னேறியுள்ளோம். உலகின் மிக மலிவான தடுப்பூசி நம் நாட்டில் கிடைக்கிறது.


8:54 PM 4/20/2021
நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்துள்ளது. மத்திய அரசு, மாநில அரசு, தனியார் துறை அனைவருக்கும் ஆக்சிஜன் கிடைக்க முயற்சி செய்கின்றன. இந்த திசையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன: பிரதமர் மோடி


8:50 PM 4/20/2021
இது பெரிய சவாலாக மாறியுள்ளது, ஆனால் அதை நாம் மீண்டு வர வேண்டும். தைரியம் மற்றும் தன்னம்பிக்கையை நாம் ஒரு போதும் இழந்து விடக் கூடாது: பிரதமர் மோடி


8:45 PM 4/20/2021

COVID19 இன் இரண்டாவது அலைகளை இப்போது எதிர்கொள்கிறோம். நீங்கள் அனுபவிக்கும் வேதனையை நான் புரிந்துகொள்கிறேன், மேலும் கோவிட் காரணமாக அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்: பிரதமர் மோடி


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,53,21,089 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,761 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனாவிற்கு கொத்து கொத்தாக மரணமடைந்து வருகின்றனர். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டு வருகிறது

அந்தவகையில் கொரோனா தொற்று பரவல் குறித்து கடந்த 5 நாட்களாக பிரதமர் மோடி (PM Modi) ஆலோசனை நடத்தி வந்தார். மாநில அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், மருந்து உற்பத்தியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்று இரவு 8.45 மணிக்கு தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். 

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News