New ration card Status Application : ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெற்றுக் கொள்ள இது அத்தியாவசியமான ஆவணமாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மகளிர் உரிமைத் தொகை முதல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். இதனை ஆன்லைன், ஆப்லைன் என இரண்டு வழிகளிலும் விண்ணப்பித்து வாங்கலாம். ஆன்லைனில் விண்ணப்பித்தால் உங்களின் விண்ணப்பம் எந்த நிலையில் இருக்கிறது? என்பதை வீட்டில் இருந்தபடியே நீங்கள் பார்த்துக் கொள்ளலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரேஷன் கார்டு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்


புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணபிப்பவர்கள் திருமண சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின் கட்டண பில், வாடகை வீட்டில் இருந்தால் வாடகை ஒப்பந்தம், ஆதார் அட்டை, குடும்ப தலைவர் புகைப்படம் ஆகியவை வேண்டும். பழைய ரேஷன் கார்டில் இருந்து உங்கள் பெயர்களை நீக்கியதற்கான ஒப்புகைச் சீட்டு தேவை.


மேலும் படிக்க | ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்களுக்கு குட் நியூஸ், சீக்கிரம் வரப்போகுது


ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?


புதிய ரேஷன் கார்டு விண்ணபிக்க ஆன்லைனில் அதிகாரப்பூர்வ தளத்துக்கு செல்ல வேண்டும். அங்கு கேட்கப்பட்டிருக்கும் தகவல்களை கவனமாக பூர்த்தி செய்யுங்கள். புகைப்படம் முதல் ஆதார் வரை அனைத்து தகவல்களும் சரியாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் விண்ணப்பித்த பிறகு உங்கள் சான்றுகள் அனைத்தும் சரியாக இருக்கிறதா என குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆய்வு செய்யும். உண்மை என்றால் உங்களுக்கு ரேஷன் கார்டு கொடுக்கப்படும். தமிழக அரசைப் பொறுத்தவரை 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு கொடுக்கப்படும் என அறிவித்திருக்கிறது.


15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைத்துவிடுமா?


ஆனால் உண்மையில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்த 15 நாட்களில் விண்ணப்பதாரர்களுக்கு கிடைப்பதில்லை. குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கிறது. ஏனென்று விசாரிக்கும்போது புதிய ரேஷன் கார்டு பெற்றவர்கள் உடனடியாக மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கிறார்கள். இது அரசுக்கு நிதி செலவில் நெருக்கடியை ஏற்படுத்துவதால் புதிய ரேஷன் கார்டு விநியோகம் மெதுவாக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 


யாருக்கெல்லாம் உடனடியாக ரேஷன் கார்டு கிடைக்கும்?


புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்தவர்கள் இப்போதைய நிலை என்னவென்றால் ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பு வரை விண்ணப்பித்தவர்களுக்கு ரேஷன் கார்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவர்களின் விண்ணப்பங்கள் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்து ஏற்கப்படுவதும், நிராகரிக்கப்படுவதும் நடைபெற்று வருகிறது. அதனால், ஜூன் 15 ஆம் தேதிக்குப் முன் விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் ரேஷன் கார்டு கிடைக்கும். அந்த தேதிக்குப் பின்னர் விண்ணப்பித்தவர்களுக்கு புதிய ரேஷன் கார்டு இன்னும் ஒரு சில மாதங்களுக்குப் பிறகு கிடைக்கும்.  


மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டுக்கு எவ்வளவு நாட்களில் கிடைக்கும்? சூப்பர் அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ