பல்லாவரம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் நாகம்மாள். இவரது கணவர் சின்னையா தணியார் நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார். பல்லாவத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருமுடிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக இருவரும் புறப்பட்டுள்ளனர். சின்னையா வாகனத்தை ஓட்டிச் செல்ல, மனைவி நாகம்மாள் பின்னால் அமர்ந்து சென்றுள்ளார். அனகாபுத்தூர் அருகே காலை 5.30 மணி அளவில்  சென்று கொண்டிருந்தபோது, வாகனம் சின்னையாவின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அண்ணாமலை டீமில் இருந்து விழுந்த அடுத்த விக்கெட் - மவுனம் கலைத்த திருச்சி சூர்யா


அவர்கள் சென்று கொண்டிருந்தபோது மாடு திடீரென குறுக்கே வந்துள்ளது. அதனால், அதிர்ச்சியடைந்த சின்னையா தன்னால் இயன்றளவுக்கு முயன்றும் மாட்டின் மீது மோத வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது பின்னால் அமர்ந்திருந்த மனைவி நாகம்மாள் வலது பக்கமாக சாலையில் கீழே விழு, அந்த நேரத்தில் எதிர்புறமாக தண்ணீர் லாரி ஒன்று வந்துள்ளது. கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரத்தில் விழுந்தார் நாகம்மாள். இதில் தலை சிதறி பரிதாபமாக அவர் உயிரிழக்க நேரிட்டது. 


இதைப் பார்த்த லாரி டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருந்து ஓடி உள்ளார். லாரி மோதி மனைவி தலை துண்டாகி இறந்ததைப் பார்த்த கணவர் சின்னையா, மனைவியின் உடலை கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அங்கு இருந்தவர்களிடம் சோகத்தை ஏற்படுத்தியது. தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், லாரி மோதி கணவன் கண் முன்னே மனைவின் தலை துண்டாகி இறந்த விபத்தின்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் இருக்கும் மாடுகளால் விபத்தில் சிக்கி அடிக்கடி உயிர்கள் பறிபோவது தொடர்ச்சியாகவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருவதால், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.


மேலும் படிக்க | அதிமுக கூட்டணி அவசியமில்லை, தனித்தே சமக களம் காண தயார் - சரத்குமார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ