காட்டுத்தீ...வெயில்...மிருகங்களின் தாகம்...! வனத்துறை சந்திக்கும் சவால்கள்
கோடைக்காலம் சுட்டெரிப்பதால் நீலகிரி வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படாமல் இருக்கவும், வனவிலங்குகள் தண்ணீர் தாகத்தை தீர்க்கவும் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை வனத்துறையினர் செய்து வருகின்றனர்.
பருவநிலை மாற்றத்தின் விளைவுகளைக் கண்டு விழிபிதுங்கி நிற்கிறது உலகம். இயற்கையின் மாறுதல்களை செய்வதறியாது வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர் அறிவியல் விஞ்ஞானிகள். உலகம் முழுக்க இப்போது பெரிதும் விவாதிக்கப்படும் முக்கிய ‘டாபிக்’காக பருவநிலை மாற்றத்தையே முன்னிறுத்துகின்றனர் விஞ்ஞானிகள். இந்தியாவின் பருவநிலை கடந்த கால்நூற்றாண்டில் ‘தாறுமாறாக’ மாறியிருப்பதாக சூழலியல் ஆர்வலர்கள் ‘சீரியஸ்’ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை வழக்கம்போல் தென்மேற்குப் பருவ மழைக் காலத்தில் பெய்ய வேண்டிய மழை, சம்பந்தமே இல்லாமல் வேறு மாதத்தில் பெய்கிறது. மார்கழியோடு முடியும் பனி, பங்குனி முதல் வாரம் வரை நீடிக்கிறது. இதன் எதிரொலியாக மக்கள் பாதிக்கப்படுவதுடன், சூழலியல் உயிர்களான தாவரங்களும், விலங்குகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. பொதுவாக அக்னி வெயில் மே மாதத்தில் வாட்டி வதைக்கும். அதற்கு முன்னதாக ஏப்ரல் மாதத்தில் சுட்டெரிக்கும் வெயில், இந்தாண்டு மார்ச் மாதம் இரண்டாம் வாரத்திலேயே தனது கோரத்தைக் காட்டத் தொடங்கிவிட்டது. இதனால், மேற்குத்தொடர்ச்சி மலையில் வசிக்கும் வனவிலங்குகள் கோடை வறட்சியை தாங்கிக்கொள்ள முடியாமல் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால், பயிர்களை அழித்து சேதப்படுத்தும் வனவிலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான மோதல்களும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
மேலும் படிக்க | இனிமே யானையை பார்க்கும்போது இதையெல்லாம் நியாபகத்துல வெச்சுக்கோங்க!
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR