Senthil Balaji Case Update: சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று அமலாக்க பிரிவினர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலமாக ஆஜர்படுத்தப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அப்போது அவரிடம் அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்த மனு கிடைத்ததா என  நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு செந்தில் பாலாஜி இல்லை என தெரிவித்ததை அடுத்து, மனுவை கையெழுத்திட்டு பெற்றுக் கொள்ளும்படி நீதிபதி அல்லி அறிவுறுத்தினார்.


தொடர்ந்து நடந்த வாதத்தில் வழக்கில் அமலாக்கப் பிரிவு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல். சுந்தரேசன்,"உண்மையை வெளி கொண்டுவர செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியம். போக்குவரத்துக் கழக நியமனங்களுக்கு பெற்ற தொகை குறித்த முழு விவரங்களை பெற வேண்டி உள்ளது. அமலாக்கப் பிரிவினர் விசாரணைக்கு ஒத்துழைக்காத செந்தில் பாலாஜி காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். 


மேலும் படிக்க | 'உத்தமபுத்திரன் பாஜக... எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள்' முதலமைச்சர் ஸ்டாலினின் எச்சரிக்கை!


இந்த வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ,"கடந்த ஜூன் 13ஆம் தேதி காலை 7 மணி முதல் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை 2 மணி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தியுள்ளதால் அவரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க கூடாது" என்று வாதிட்டார்.


மேலும் இதய அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற உயர்நீதிமன்றம் அனுமதி அளித்து பிறப்பித்த உத்தரவு குறித்தும் முதன்மை அமர்வு நீதிபதி அல்லியிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக உள்ள அமலாக்க பிரிவின் துணை இயக்குனர் கார்த்திக் தாசரி இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டது முதல் கைது வரைக்கும் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும் கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கான காரணம் குறித்தும் தனது வாக்குமூலத்தை அளித்தார்.


இறுதியாக அமலாக்கப் பிரிவினர் 15 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு குறித்து செந்தில் பாலாஜியின் விருப்பம் குறித்து நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் விருப்பமில்லை என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, உயர்நீதிமன்ற உத்தரவின் நகலை தாக்கல் செய்வதற்காக மனு மீதான விசாரணையை நாளை தள்ளிவைத்ததுடன் அமலாக்க பிரிவினரின் மனு மீது நாளை (ஜூலை 16) உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.


மேலும் படிக்க | அமலாக்கத்துறை வைக்கும் செக்... காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்படும் செந்தில் பாலாஜி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ