மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா காட்டுச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர்  தியாகராஜன் (27).இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி பிரவினா(25). இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, கருவுற்ற பிரவினாவிற்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பரிசோதனை செய்ததில் அவரது வயிற்றில் 3 கருக்கள் வளர்வது தெரியவந்ததையடுத்து அடுத்து  கணவர் மற்றும் குடும்பத்தினர் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொண்டனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சங்கரன்பந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடாந்து பரிசோதனை செய்து வந்தனர். 9 மாதங்கள் கடந்த நிலையில் பிரவினாவிற்கு பிரசவ வலி எடுத்ததை தொடர்ந்து அவரை உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அனுமதித்தனர். 


மேலும் படிக்க: மயிலாடுதுறை: சினிமா பாணியில் இளம்பெண் கடத்தல்: கடைசி நிமிட டிவிஸ்ட்!



ஒரு வாரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அறுவைசிகிச்சை செய்து 3 அழகான பெண் குழந்தைகள் பிறந்தன. ஒவ்வொரு குழந்தையும் சுமார் ஒன்றரை கிலோ எடை மட்டுமே இருந்த காரணத்தால் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை கண்காணிப்பு பிரிவில் (இன்குபேட்டரில்) வைத்து குழந்தைகளை பத்திரமாக பாதுகாத்து வந்தனர். மேலும், மருத்துவர்கள் உறவினர்களிடம் தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்தனர்.



மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த தாய் உறவினர்கள் மகிழ்ச்சியில் திழைத்தனர்.


மேலும் படிக்க: செயினை அறுக்க முயன்ற திருடர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ