மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகள் வெளியில் தெரிகின்றனர் - திருச்சி சிவா!
தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்ணினம் போற்றுவோம் என்ற தலைப்பில் திருச்சி சிவா பேசினார்.
சுதந்திர போராட்ட வரலாற்றில் தமிழ் பெண் போராளிகளின் பெயர்கள் மறைக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில்தான் பெண் போராளிகளின் தியாகங்கள் வெளி கொண்டு வரப்படுகின்றன என தஞ்சை மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற "மாபெரும் தமிழ்க் கனவு" தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில் திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேசியுள்ளார். தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் நடைபெற்ற மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெண்ணினம் போற்றுவோம் என்ற தலைப்பில் திருச்சி சிவா பேசினார்.
மேலும் படிக்க | திருச்செந்தூர் சுவாமி திருக்கோயில் செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு முழுவதும் நமது மரபின் வளமையையும், பண்பாட்டின் செழுமையையும், சமூக சமத்துவத்தையும், பொருளாதார மேம்பாட்டிற்கான வாய்ப்புகளையும், இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த மாபெரும் தமிழ் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திரத்திற்க்காக போராடிய தமிழகத்தை சேர்ந்த பெண் போராளிகளின் பெயர்கள் மறைக்கப்படுகின்றன.
குறிப்பாக முதல் சுதந்திர போராட்டத்தால் ஆங்கிலேயர்களிடம் இழந்த இடத்தை மீட்டெடுத்த வீர மங்கை வேலுநாச்சியாரின் படையில் தளபதியாக இருந்து எதிரிகளின் ஆயுதங்களை அழிக்க தனது உடலில் தீவைத்து மனித வெடிகுண்டாக செயல்பட்டு, ராணி வேலுநாச்சியாரின் வெற்றிக்கு காரணமாக இருந்த குயிலியின் வரலாறு வெளியில் தெரியாத நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அவரின் புகழ் பரப்பும் பணியை மேற்கொண்டுள்ளது சிறப்பிற்க்குறியது. இதேபோல் தமிழ் பெண் போராளிகளின் தியாகங்கள் வெளி கொண்டுவரும் பணி தொடரும் என்றார். இந்நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி சங்கத்தமிழில் குறும்படங்கள் என்ற தலைப்பில் சிறப்புறையாற்றினார்.. மன்னர் சரபோஜி அரசுக்கல்லூரி முதல்வர் ரோசி கல்லூரி மாணவ, மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் படிக்க | அதிமுக எதிர்க்கட்சித் துணைத் தலைவர் யார்? மாஃபா பாண்டியராஜன் சொன்ன அந்த நபர்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ