பரதநாட்டியத்தில் உலக சாதனை முயற்சி: 1,330 திருக்குறளின் குறட்பாக்களையும் பரதநாட்டியம் மூலமாகவும், இசை, கவிதை, உரைநடை, பாட்டு மூலமாக 12 மணி நேரத்தில் வெளிப்படுத்தி உலக சாதனை முயற்சி மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை அதாவது இன்று (07 ஆகஸ்ட் 2022) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவள்ளுவரின் உலகப் பொதுமறையான திருக்குறளின் பெருமையை கலைகளின் வாயிலாக உலகுக்கு உணர்த்தும் விதமாக, பரதநாட்டிய உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.


மேலும் படிக்க | வாழ்ந்தா இப்படி வாழணும் - பட்டதாரி இளைஞரின் கொடைக்கானல் குடில்


திருக்குறளின் 1,330 குறட்பாக்களையும், இரண்டரை வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளின் பொருளையும், தமிழ் எழுத்துகள் பதித்த ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்த பரத கலைஞர்கள் பரதநாட்டிய அசைவுகளின் வாயிலான வெளிப்படுத்தி நடனமாடினர். 


இசை, கவிதை, உரைநடை, பாட்டு ஆகிய வடிவில் மீண்டும் மீண்டும் 1330 திருக்குறளுக்கும் சுழற்சி முறையில் பயிற்சியாளர்கள் கூற அதற்கு ஏற்ப முக பாவனை, பரதநாட்டிய முத்திரை அசைவுகளுடன் இந்த சாதனை முயற்சி நடைபெற்று வருகிறது. இதில் சுழற்சி முறையில் 50 பரதநாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடி வருகின்றனர். நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பில் இந்த சாதனை பதிவு செய்யப்பட்டு வருகிறது. 


மேலும் படிக்க | மாமூல் தராத பெண்ணை வெட்டிய ரவுடி மற்றும் ஒரு பெண் கைது



 


மயிலாடுதுறை அபிநயா நாட்டியப்பள்ளி சார்பில் பரதநாட்டிய குரு உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் மாநிலம் முழுவதும் இருந்து பரதநாட்டிய மாணவ மாணவிகள் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


மேலும் படிக்க | ரோட்டோர வைத்தியரிடம் வைத்தியம் பார்த்து வரும் தோனி! வைரலாகும் புகைப்படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ