திருப்பத்துார் அருகே கலைஞர் நகரை சேர்ந்த சில வாலிபர்களுக்கும், டிஎம்சி காலனியை சேர்ந்த சில வாலிபருக்குமிடையே  ஒவ்வொரு ஆண்டும் அப்பகுதியில் நடக்கும் திருவிழாவின்போது இரு தரப்பினருக்கும்  மோதல் ஏற்படுமாம்.  இந்நிலையில் இன்று கலைஞர் நகரில் திருவிழா நடத்தப்பட்டது. அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து இரவு சுமார் 9 மணியளவில், டிஎம்சி காலனியை சேர்ந்த சிலர் கலைஞர் நகரை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் முகிலன்(22). என்பவரை சரமாரியாக தாக்கினர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | கண்மாய்க்கு வழிபாடு - ஆண்கள் மட்டுமே பங்கேற்ற பிரம்மாண்ட கிடா விருந்து.!


இந்த தாக்குதலில் முகிலனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. உடனே முகிலனை அங்கிருந்தவர்கள்  மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.   ஆனால் ஆத்திரம் தீராத மர்ம நபர்கள் திருப்பத்துார் அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்த முகிலனை ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை செய்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த கலவரத்தால் ‌மருத்துவமனை வளாகத்தில் இருந்த நோயாளிகள் மற்றும் பொது மக்கள் நாலா புறமாக சிதறியடித்து ஓடினர்.


https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/mruder.jpeg


பின்னர் தகவலறிந்த திருப்பத்துார் நகர போலீசார் விரைந்து வந்து படுகொலை செய்யப்பட்ட முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தனர். ஆனால் அதற்குள் முகிலனின் தரப்பினர் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு கொலையாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி முகிலனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப எதிர்ப்பு தெரிவித்தனர்.  அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாத வண்ணம் போலீசார் வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக  அனுப்பி வைக்கப்பட்டது .  மேலும் அசம்பாவிதங்கள் தவிர்க்க நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR