ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி!

தென்காசியில் சிறுத்தை ஒன்று ஆட்டை கொன்று தின்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 30, 2022, 10:25 AM IST
  • ஆட்டத்தை அடித்து கொன்ற சிறுத்தை.
  • மீண்டும் ஆட்டை தேடி வந்ததால் பரபரப்பு.
  • அந்த பகுதி மக்கள் அச்சம்.
ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி! title=

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கடனாநதி அடிவார பகுதியான பெத்தான்பிள்ளை குடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டு. இவர் தனது ஆடுகளை மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் மேய்ச்சலுக்கு அழைத்து சென்றபோது, ஒரு ஆட்டை மட்டும் காணவில்லை. பின்னர் அவர் அந்த ஆட்டை தேடிச் சென்றபோது, அந்த ஆட்டை சிறுத்தை அடித்து கொன்று, மரத்தில் தொங்க விட்டு சென்றது தெரிய வந்தது.

மேலும் படிக்க | கோவை: ரூ.50 கடன் வழங்க மறுத்த உறவினருக்கு கத்திக்குத்து!

thenkasi

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில், ஆடு இறந்து தொங்கியவாறு கிடந்த மரத்தின் அருகில் கண்காணிப்பு கேமராக்களை வனத்துறையினர் பொருத்தினர்.  

goat

இந்த நிலையில் இறந்த ஆட்டை உண்பதற்காக இரவில் சிறுத்தை மீண்டும் வந்தது. மரத்தில் தொங்கியவாறு கிடந்த ஆட்டை சிறுத்தை தின்றது. இந்த காட்சியானது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. தொடர்ந்து சிறுத்தையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். சிறுத்தை ஊருக்குள் புகும்நிலை இருந்தால், அதனை கூண்டு வைத்து பிடித்து செல்வோம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மரத்தில் தொங்க விட்ட ஆட்டை தேடிவந்த சிறுத்தையால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | வீட்டின் ஓட்டை துளைத்த துப்பாக்கிக் குண்டு - மீண்டும் கவனக்குறைவா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News