ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெய்நகர் பகுதியில் வசித்து வந்தவர் சசிகுமார் . 45 வயதான இவருக்கு மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உள்ளனர். சசிகுமார் ஓசூரில் உள்ள பிரபல கனராக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். இவருக்கு பூஜைகள் செய்வதிலும் மாந்திரீகம் செய்வதிலும் ஆர்வம் உண்டு என கூறப்படுகிறது. சசிகுமாரும் தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் மாரண்டஅள்ளி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரும் நண்பர்கள். இதனால் கோவிந்தராஜன் மகன் தினேஷ்க்கும், சசிகுமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தினேஷ், தான் நீண்ட நாள் பழகிய தோழி ஒருவரை மாந்திரீகத்தின் மூலம் காதலியாக மாற்றி திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க வைக்க வேண்டும் என சசிகுமாரை நாடி உள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராமநாதபுரம்: கட்டு கட்டாக சிக்கிய லட்சக்கணக்கான லஞ்சப் பணம்..! லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடி


அதற்கு சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என சசிகுமார் கூறி தோழியை அழைத்து சொல்லியுள்ளார். அதனை நம்பிய தினேஷ் தனது தோழியான இளம் பெண்ணை ஓசூருக்கு அழைத்து வந்து சசிகுமாரிடம் விட்டுள்ளார். தனிமையை பயன்படுத்தி கொண்ட சசிகுமார் அந்த இளம் பெண்ணை கற்பழித்து சீரழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம் பெண் நடந்த சம்பவங்கள் குறித்து தினேஷுடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷும் அவரது நண்பர் மாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்த குணாளன் (20) என்பவரும் சசிகுமாரை தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள சந்தப்பேட்டை வனப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். 


அங்கு சசிகுமாரை அடித்து துன்புறுத்திய இருவரும் அவரது பிறப்புறுப்பை அறுத்து கொலை செய்துள்ளனர். இந்த கொலை சம்பவம் குறித்து ஏரியூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தினேஷ் மற்றும் குணாளன் ஆகிய இருவரும் வழக்கறிஞர்களுடன் பென்னாகரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்த விசாரணையில் மேலும் சில தகவல்கள் வெளியாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோழியை சீரழித்த மாந்திரீகவாதியை நண்பருடன் சேர்ந்து இளைஞர் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | ஸ்டெர்லைட்: தூத்துக்குடிக்கு போய் பேசு முடியுமா? ஆர்என் ரவி பேச்சுக்கு கனிமொழி - உதயநிதியின் ரியாக்ஷன்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ