எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு
காட்பாடி அருகே மேல்பாடி பகுதியில் எஸ்.ஐ. தாக்கி அவமானப்படுத்தியதாக தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு உதவி காவல் ஆய்வாளர் கார்த்திக்கை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஐஜி உத்தரவு.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் உள்ள குகையநல்லூர் காலனியை சேர்ந்தவர் சரத் (வயது 26). இவர் நெல் அறுவை எந்திரம் வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த 11-ஆம் தேதி சரத் மேல்பாடி காவல் நிலையம் அருகே உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில், படுகாயம் அடைந்த அவர் வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.
சரத்தை தொழில் செய்ய விடாமல் போலீசார் அடிக்கடி தொந்தரவு செய்து வருகிறார்கள். அதனால் தான் விரக்தி அடைந்து அவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளிக்கப்பட்டது. அதையடுத்து மேல்பாடி உதவி ஆய்வாளர் கார்த்தி திருவண்ணாமலை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து கடனாளியானவர் தற்கொலை
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார். தற்போது மேல்பாடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உத்தரவிட்டுள்ளார். மேலும் சரத் குடும்பத்தினர் மீது காதல் விவகாரம் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கை உதவி ஆய்வாளர் கார்த்தி சரியான முறையில் விசாரிக்கவில்லை. அதன்காரணமாகவே சரத் போலீஸ் நிலையம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.
எனவே உதவி ஆய்வாளர் கார்த்தி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | ஆன்லைன் ரம்மி விளம்பர வழக்கு; மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR