மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையிலான ஆன்லைன் ரம்மி மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை விளம்பரப்படுத்தும் வகையில் நடித்த நடிகர்கள் , விளையாட்டு வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆன் லைன் விளையாட்டுக்களில் மூழ்கி கிடப்பது என்பது தனி நபரின் ஒழுக்கம் சார்ந்த விஷயம் என்பதால், மனுதாரர் அதற்கான அமைப்பை அணுகி நிவாரணம் பெறலாம் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆன்லைன் விளையாட்டையும் (Online Games) சூதாட்டத்தையும் ஊக்குவிக்கும் வகையில், நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் அதற்கான விளம்பரங்களில் நடிப்பதால் இளைய தலைமுறையினர் வெகுவாக அதை நோக்கி ஈர்க்கப்படுகின்றனர். எனவே, விளம்பரத்தில் நடித்த கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சவுரவ் கங்குலி, நடிகர் பிரகாஷ்ராஜ், ராணா, சுதீப் கான், நடிகை தமன்னா உள்ளிட்டோர் மீதும், ஆன்லைன் ரம்மி கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி தனது பொது நலன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ALSO READ | மாணவர்கள் ஆன்லைன் கேமுக்கு அடிமையாவதை தடுக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை
தமிழகத்தில், ஆன் லைன் சூதாட்டங்கள், ஆன் லைன் ரம்மி உள்ளிட்ட ஆன் லைன் விளையாட்டுகளால் தினம் தோறும் தற்கொலை அதிகரித்து வருவதோடு, பொன்னான நேரம், வாழ்வாதாரம், பொருளாதாரம் என அனைத்தும் வீணாகிறது எனக் கூறிய மனுதாரர், இதனால், ஆன் லைன் விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
சூதாட்டம், ஆன்லைன் விளையாட்டுக்களை ஊக்குவிக்கு வகையில் நடித்து, சைபர் கிரைம் மற்றும் கலாச்சார சீரழிவு ஆகியவற்றுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனு நிராகரித்த நீதிமன்றம், விளம்பர நோக்கில் மனுவை தாக்கல் செய்து நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்க வேண்டாம் எனவும், இதற்கு உரிய அமைப்பை அணுகி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ALSO READ | பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் வழக்கு; தனிப்பட்ட அடையாளங்களை வெளியிட தடை..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR