சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்து வந்த சிறுமி, திடீரென பேசுவதை நிறுத்தியதால், அவரை தரதரவென இழுத்துச்சென்று கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்ன நடந்தது என்பதை விரிவாக தெரிந்து கொள்வோம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த 16-வயதான சிறுமி வண்டலூர் அருகே உள்ள தனியார் கல்லூரியில் டிப்ளோமா முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வசந்த் என்ற இளைஞருடன் இன்ஸ்டாகிராம் மூலம் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. வச்ந்த் மதுரையில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வந்துள்ளார். இன்ஸ்டா மூலம் இவர்கள் காதலை வளர்த்து வந்தனர். 


இந்த சூழலில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வசந்த் மதுரையில் ஏற்பட்ட பிரச்சனை ஒன்றில் சிக்கி சிறைக்கு சென்று வந்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை பேசும்படி தொடர்ந்து செல்போன் மூலம் வசந்த தொந்தரவு கொடுத்ததாகவும், வசந்திடம் பேச விருப்பமில்லாததால் அவரது நம்பரை பிளாக் லிஸ்டில் போட்டதாகவும் கூறப்படுகிறது. 


இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மாணவி வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பிய நிலையில், மாணவியை பின்தொடர்ந்து வந்த  வசந்த் மாணவியிடம் கடைசியாக பேச வேண்டும் என்று கெஞ்சி மாம்பாக்கம்-மேடவாக்கம் பிரதான சாலை வழியாக அழைத்து சென்றுள்ளார். 


மேலும் படிக்க | “அவளுடன் நானும் இறந்து விட்டேன்..” மகள் குறித்து உருக்கமாக பதிவிட்ட விஜய் ஆண்டனி!


அப்பொழுது மேடவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே நடந்து சென்றபோது மாணவியை  வலுகட்டாயமாக உள் சாலை ஒன்றுக்கு இழுத்துச் சென்றுள்ளார். அந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் உள்ளபோதே மாணவியை வலுகட்டாயமாக உள் சாலைக்கு இழுத்து சென்று தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை கொலை செய்யும் நோக்கத்தோடு சரமாரியாக குத்தியுள்ளார்.  அப்பொழுது மாணவி நிலைக்குலைந்து சாலையில் விழுந்ததும் அங்கிருந்து மாணவன் வசந்த் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி ஓடியுள்ளார். 


மாணவி ஒருவர் இரத்த வெள்ளத்தில் சாலையில் விழுந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் அருகில் உள்ள பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  மாணவியை மீட்டு  குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி அளித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


மாணவிக்கு சிகிச்சை அளித்த பின்பு அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் மாணவியை கத்தியால் குத்தியது கல்லூரி மாணவன் வசந்த் என்பது தெரியவந்தது. பின்னர் மாணவியிடம் புகார் பெற்று வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ஆல்பின்ராஜ் விசாரணையை தொடங்கினர். முதற்கட்டமாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற தனிப்படையினர் அங்கு பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். 


அந்த சிசிடிவி காட்சியில் கல்லூரி மாணவன் வசந்த் மாணவியின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்றது தெரியவந்துள்ளது. அதன்பின்னர் வசந்தை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், பதுங்கி இருந்த அவர் நேற்று கைது செய்யப்பட்டார். பின்னர் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். 


விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாகவும், வசந்த் மதுரையில் அடிதடி வழக்கு ஒன்றில் சிறை சென்று வந்த தகவல் அறிந்த மாணவி வசந்தை பிரேக் அப் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். சம்பவம் நடந்த அன்று காதலிக்கும் படி கெஞ்சியும் மாணவி மறுத்ததால் அவரை கத்தியால் குத்தியதாகவும் வசந்த் வாக்குமூலம் அளித்துள்ளார். 


பின்னர் வசந்த் மீது கொலை முயற்சி, பெண் கொடுமை சட்டம், சாலையில் நடந்து சென்ற பெண்ணை முறையற்ற வகையில் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட பழக்கம் கத்திக்குத்து வரை சென்றது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க | நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது - அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ