Youtuber Irfan Controversy Latest News Updates: பிரசவத்தின்‌ போது குழந்தையின்‌ தொப்புள்‌ கொடியை யூ-ட்யூபர்‌ இர்‌ஃபான்‌ வெட்டிய விவகாரத்தில் சோழிங்கநல்லூரில்‌ உள்ள தனியார்‌ மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம்‌ செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏற்கெனவே உள்‌ நோயாளிகளாக இருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்கலாம்‌. புதிதாக நோயாளிகளை அனுமதிக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முதல்கட்டமாக மருத்துவமனைக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம்‌ விதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவ ஊரக நலப்பணிகள்‌ இயக்குநர்‌ ராஜமூர்த்தி தெரிவித்துள்ளார். 


மீண்டும் மீண்டும் சர்ச்சை


பிரபல யூ-ட்யூபரான இர்ஃபான் ஏற்கெனவே பிறக்க இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிவித்து வீடியோ வெளியிட்டபோதே கடுமையான சர்ச்சையில் சிக்கினார். ஆனால் அதனை துபாயில் அவர் வீடியோவாக எடுத்திருந்தார். மேலும் அவரின் வீடியோவை தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக பார்ப்பதால் இது தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றும் அரசு இதில் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் விமர்சித்தனர். இதை தொடர்ந்து இர்ஃபான் மன்னிப்பு கோரியதால் அரசு அவருக்கு எச்சரிக்கை மட்டும் விடுத்தது.  


மேலும் படிக்க | தொப்புள் கொடி வெட்டிய விவகாரம்... டாக்டர் சொல்லும் விளக்கம் என்ன?


தற்போது மீண்டும் இர்ஃபான் சென்னை சோழிங்கநல்லூரில் தனது மனைவிக்கு பிரசவம் நடப்பதை வீடியோவாக எடுத்து, அதனை வெளியிட்டிருந்தார். அப்போது பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை இர்ஃபான் கத்திரிக்கோல் கொண்டு வெட்டியது பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 


மா.சுப்பிரமணியன் சொல்வது என்ன?


இந்த விவகாரம் குறித்து நேற்று அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், "இர்ஃபான் ஏற்கனவே துபாய் சென்று அவருடைய குழந்தையின் பாலினத்தை அறிந்து வந்து வெளியில் சொன்னார். துபாயில் இதுபோன்ற சட்டங்கள் இல்லாததால் அங்கு பாலினத்தை அறிந்து வந்து இங்கு கொண்டாடினார்.


துபாயில் பாலினம் அறிவதற்கு தடையில்லை என்பதால் அவருடைய மன்னிப்பை ஏற்றோம். இங்கு செய்திருந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தை மூடியிருப்போம். அது தமிழகத்தில் நடக்கவில்லை என்பதால் தான் நோட்டீஸ் அளித்து விளக்கம் கேட்டு அவர் மன்னிக்கப்பட்டார்.


இப்போது தொப்புள் கொடியை வெட்டிய விவகாரத்தில் மருத்துவ சட்ட விதிகளை மீறியதற்காக இர்ஃபான் மீதும், அவரை மருத்துவமனையில் அனுமதித்த ரெயின்போ மருத்துவமனை மருத்துவர் நிவேதிதா ஆகியோர் மீதும் செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் மருத்துவ பணிகள் இயக்ககம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கவுன்சில் சார்பில் மருத்துவர் நிவேதிதா பயிற்சியை தொடரவும் தடை விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் சட்ட, துறை ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என கூறியிருந்தார். 


மேலும், இர்ஃபான் மீது நடவடிக்கை எடுப்பதில் அரசியல் பின்புலம் ஏதும் இல்லை என்றும் இந்த முறை இஃர்பான் மன்னிப்பு கேட்டாலும் அவரை விட மாட்டோம் என்றும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார். தவறு செய்தவர்களை தண்டிக்க அரசு தவறாது என்றும் கூறியிருந்தார். அந்த வகையில் இன்று இர்ஃபானை அனுமதித்த மருத்துவமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், 10 நாள்களுக்கு மருத்துவம் செய்ய தடை விதித்தும் அறிவிப்பு வெளிவந்துள்ளது. 


மேலும் படிக்க | யூடியூபர் இர்பான் கைது? இதே வேலையா போச்சு! மீண்டும் மீண்டும் சர்ச்சை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ