மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் ! என்ன காரணம் தெரியுமா?
கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக ஆத்தூர் வழியாக அழைத்து சென்ற போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
ஆத்தூர் அரசு மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் யூடிபர் சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று திரும்பும் போது அமைச்சர் உதயநிதி உத்தரவின் பேரில் என் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். பிரபல யூடிபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், நீலகிரி போலீசார் கோவையிலிருந்து சென்னைக்கு வழக்கு ஒன்றில் ஆஜர் படுத்துவதற்காக, சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக அழைத்து சென்றனர். அப்போது சவுக்கு சங்கருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டதாக கூறி மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஊட்டி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் புகார் அளித்தன் பேரில் சென்னையிலிருந்து 29ம் தேதி விசாரனைக்கு அழைத்து சென்ற நிலையில் ஊட்டி ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மீண்டும் சென்னைக்கு அழைத்து சென்றனர். இரவு நேரம் என்பதால் நேற்று, இரவு அவினாசி கிளை சிறையில் இருந்து காலை 7. 00 மணிக்கு அங்கிருந்து சைபர் கிரைம் ஆய்வாளர் தலைமையில் 17 போலீஸார் அழைத்து வந்த போது சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே திடீரென வயிற்று வலி கூறி வேனில் மயக்கமடைந்துள்ளார். உடனடியாக அவரை மதியம் 12.30 மணியளவில், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகளை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையறிந்த செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க சென்ற போது பாதுகாப்பு பணியில் இருந்த நீலகிரி போலீசார் செய்தி சேகரிக்க அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொது மக்களை அங்கிருந்து வெளியேற்றியதால் சிகிச்சைக்காக வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் வெளியில் காத்திருக்க வேண்டிய சூழல் நிலவியது. இரண்டு மணி நேர சிகிச்சைக்கு பின் மீண்டும் காவல்துறை வேனில் ஏறுவதற்காக சவுக்கு சங்கர் வந்தார். அப்போது வேனில் இருந்தபடியே என் கைதுக்கு உதயநிதி தான் காரணம், உதயநிதி உத்தரவின்பேரில், என் மீது மீண்டும் மீண்டும் பொய் வழக்கு போட்டு கைது செய்து வருகின்றனர் என தெரிவித்தார்.
சவுக்கு சங்கர் வழக்கறிஞர் குற்றசாட்டு
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பங்கு சங்கர் அவர்களை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் அவரை பொதுமந்து காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் விசாரித்துள்ளதாகவும், அதிகாலை 3 மணி வரை சவுக்கு சங்கரி விசாரணை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து பேசியா அவர்கள் திமுக அமைச்சர் கே.என். நேருவிற்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு என் கேட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக ஆகவும், மேலும் ஜாமீன் பெற்று வெளியே சென்றவுடன் திமுக பற்றி பேசக்கூடாது என மிரட்டியதாகவும், தற்பொழுது சவுக்கு சங்கர் புழல் சிறைக்கு கொண்டு சென்றவுடன் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் பதியப்பட்ட வழக்குகளின் பெயரில் அவரை தொடர்ந்து கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியுள்ளதாக சவுக்கு சங்கர் வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கொலை குற்றங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும் - சபாநாயகர் அப்பாவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ