நாட்டிலேயே முதல் முறையாக தென் இந்திய மொழிகளில் டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்தும் ZEE MEDIA
Zee Digital Tv: `சார்பு இல்லை! சமரசம் இல்லை!` என்ற கொள்கையோடு தமிழ்நாட்டு மக்களுக்காக Zee Tamil News டிஜிட்டல் டிவி செயல்படும்.
Zee Digital Tv: நாட்டின் மதிப்புமிக்க செய்தி ஊடகக் குழுவான ஜீ மீடியா மற்றொரு புதுமையான முயற்சியைத் தொடங்கியுள்ளது. நாட்டில் முதல் முறையாக 24 மணி நேரமும் நேரலை டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்த உள்ளது. நான்கு தென் இந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் டிஜிட்டல் டிவி ஒளிபரப்பை ZEE MEDIA தொடங்குகிறது.
நாட்டிலேயே முதல் தனியார் சாட்டிலைட் சேனலாகத் தொடங்கிய ஜீ மீடியா, அன்றிலிருந்து தொடர்ந்து வளர்ந்து வருகிறது. தனியார் செயற்கைக்கோள் சேனல்களைக் கொண்ட நாட்டிலேயே முதல் தனியார் தொலைக்காட்சி சேனல் என்ற பெருமையை பெற்ற ஜீ மீடியா நாட்டிலேயே மிகப்பெரிய செய்தி வலையமைப்பு கொண்ட ஊடகமாகும். அதேபோல சமூக ஊடகங்களைப் பொறுத்தவரை, இது 15.4 கோடி பின்தொடர்பவர்களைக் கொண்ட மிகப்பெரிய நெட்வொர்க் ஆகும். ஊடகத்துறையில் மாறிவரும் மாற்றங்களுக்கு ஏற்ப எப்போதும் புதுமைகளைச் சேர்ப்பதை ZEE MEDIA வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வரிசையில், தற்போது மற்றொரு புதுமையான முயற்சியில் களம் இறக்கியுள்ளது. ஜீ மீடியா முதல் முறையாக டிஜிட்டல் டிவியை அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக நான்கு தென் இந்திய மொழிகளில், நாளை (ஜனவரி 25) காலை 10 மணிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளிலும் டிஜிட்டல் செய்தி சேனலை (Digital News Channel) ஒரே நேரத்தில் துவங்க உள்ளது. அதற்கான அனைத்து பணிகளும் முடிந்து மொத்த அணியும் தயாராகி விட்டது.
"சார்பு இல்லை! சமரசம் இல்லை!" என்ற கொள்கையோடு தமிழ்நாட்டு மக்களுக்காக Zee Tamil News டிஜிட்டல் டிவி செயல்படும். நமது சேனலில் அரசியல் முதல் பொழுதுபோக்கு என பல்வேறு செய்திகளும் விவாதங்களும், முற்றிலும் டிஜிட்டல் சேனலாக YouTube உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நேரலையில் ஒளிபரப்பப்படும்.
ZEE தமிழ் News டிஜிட்டல் டிவி:
ZEE தெலுங்கு News டிஜிட்டல் டிவி:
ZEE கன்னடா News டிஜிட்டல் டிவி:
ZEE மலையாளம் News டிஜிட்டல் டிவி:
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR