பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ வாடிக்கையாளர்கள் உணவு ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் டெலிவரி செய்யப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியான பிறகு கடுமையாக விமர்சனம் எழுந்தது. இந்த அறிவிப்பால் குறைந்த நேரத்தில் உணவு வழங்க வேண்டும் என்பதற்காக சாலை விபத்துகள் அதிகரிக்கக் கூடும் என்றும் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் போக்குவரத்து விதிகளை மீறுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக பலர் விமர்சனம் செய்தனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும், இந்தச் சேவையினால் டெலிவரி வழங்கும் நபருக்கு நெருக்குதல் அதிகமாகும் என சமூக வலைதளங்களில் தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு  வந்த நிலையில்,10 நிமிடத்தில் டெலிவரி திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து முழுமையான விளக்கம் கேட்கப்படுமென சென்னை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | Zomato Insta: குழப்பமே வேண்டாம்! 10 நிமிடத்தில் என்னவெல்லாம் கிடைக்கும்..!!


இந்நிலையில், 10 நிமிட உணவு டெலிவரி திட்டம் சென்னையில் அறிமுகப்படுத்தப்படாது என சொமேட்டோ அறிவித்துள்ளது. சொமேட்டோ இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய நினைத்தால் சென்னை நகர காவல்துறையின் முன் அறிவுறுத்தல் மற்றும் ஆதரவுடன் அறிமுகப்படுத்தப்படும் என சொமேட்டோ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக, Zomato நிறுவனர் தீபிந்தர் கோயல், 10 நிமிடங்களில் Zomato மூலம் உணவு விநியோகம் விரைவில் தொடங்கும் என்று ட்வீட் செய்தார். இதில் உணவின் தரம் – 10/10, டெலிவரி செய்யும் நபரின் பாதுகாப்பு – 10/10 மற்றும் டெலிவரி நேரம் – 10 நிமிடங்கள் என அவர் கூறியிருந்தார்.



மேலும் படிக்க | Zomato கொடுத்த அதிர்ச்சி! முந்திரி-சீஸ் கறியில் இலவசமாக கிடைத்த கரப்பான் பூச்சி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR