Zoom செயலியை கண்டுபிடித்தவர்கள் ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் மகனும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இன்று காலை 10 மணி அளவில் திமுக பொதுக்குழு கூட்டம் காணொளியில் ஜூம் செயலி மூலம் கூடியது. இந்த கூட்டத்தில், தமிழகம் முழுவதும் 67 இடங்களில் இருந்து சுமார் 3,500 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். அதன் பின்னர் காணொளி மூலமே அனைத்து தீர்மானங்களும் இயற்றப்பட்டது. 


இந்நிலையில், DMK பொதுக்குழு கூட்டத்தில் முதல் முறையாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசினார். அப்போது அவர் கூறுகையில்., தனக்கு பேச வாய்ப்பளித்த அன்பு மாமா துரைமுருகன் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், புதிய பொதுச் செயலாளராகவும் புதிய பொருளாளராகவும் பதவி ஏற்றுள்ள துரைமுருகன் மற்றும் டிஆர் பாலு அவர்களை வாழ்த்த எனக்கு வயதில்லை என்றும் கூறினார்.  


ALSO READ | DMK பொதுச்செயலாளராக துரைமுருகன், பொருளாளராக TR.பாலு போட்டியின்றி தேர்வு.!


மேலும் அவர் கூறுகையில், ஜூம் செயலியை கண்டுபிடித்தவர்கள் முக ஸ்டாலினுக்கு ராயல்டி கொடுக்க வேண்டும் என்று கூறினார் ஏனெனில் பொதுக்குழு கூட்டத்தையே அவர் ஜூம் செயலியில் நடத்தியுள்ளார் என்றும் அவர் பெருமையுடன் தெரிவித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


இந்த கூட்டத்தில், திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். திமுக பொதுச்செயலாளர், பொருளாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட துரைமுருகன், டி.ஆர்.பாலுவிற்கு கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.