தமிழக பள்ளி வேலை நாட்கள் 170-லிருந்து 185-ஆக உயர்வு!
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், பள்ளிகள் இயங்கும் நாட்கள் 170-லிருந்து 185 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில்...
தமிழகத்தின் பள்ளிகளில் நடப்பாண்டு முதல் புதிய பாடத்திட்டம் படிப்படியாக புகுத்தப்படவுள்ளது. அதன்படி முதற்கட்டமாக நடப்பாண்டில் 1 முதல் 9-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
புதிய பாடத்திட்டத்தின் கீழ் பள்ளி வேலை நாட்கள் 170-லிருந்த 185 நாட்களாக உயர்த்தப் பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் QR Code மூலம் மாணவர்கள் புத்தகங்களை செல்போனிலேயே தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக நேற்று தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் டி.ஜெகந்நாதன் செய்தியாளர்களை சந்திக்கையில்... தமிழக பள்ளியில் பயிலும் 1 முதல் 9-ஆம் வகுப்பு, 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப் புத்தகங்கள், இம்மாத இறுதிக்குள் விற்பனைக்கு கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், பாட புத்தகங்கள் ஆன்லைன் மூலமும் விற்பனை கிடைக்கும் எனவும், தனியார் பள்ளிகள் தங்களுக்கு தேவைப்படும் புத்தகங்களை ஆன்லைனில் பதிவு செய்து அதற்கான கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தி தங்களுக்கு அருகேயுள்ள பாடநூல் கழக மண்டல அலுவலகங்களில் மொத்தமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.