பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் காவிரி மேலாண்மை வாரியம், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து போன்ற விவகாரங்களை முன்வைத்து தமிழக மற்றும் ஆந்திரா உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் இரண்டு அவைகளும் தொடர்ந்து முடங்கி உள்ளன. இதனால் மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றி விவாதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


இன்றும் பாராளுமன்றம் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியதும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக மற்றும் திமுக உறுப்பினர்கள், ஆந்திரா சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திர உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். 


இதன் காரணமாக மக்களவை இன்றும் ஒத்திவைக்கப்பட்டது. எனினும் ஆந்திராவின் தெலுங்கு தேச கட்சி உறுப்பினர்கள் அவை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் வெளியேறாமல் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏர்க்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்!