ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் தனது திட்டத்தில் விலையை உயர்த்தியதை அடுத்து ​​டிசம்பர் 1, 2021 முதல் ரீசார்ஜ் திட்டங்களின் விலை அதிகரித்தது. இதன் மூலம் பல ரீசார்ஜ் திட்டங்களின் விலை உயர்ந்தது. இதனுடன், பல ரீசார்ஜ் திட்டங்களும் நிறுத்தப்பட்டன. இப்போது ஜியோ தனது ஒரு திட்டத்தில் 100 ரூபாய் குறைந்துள்ளது. இந்த திட்டத்தை இப்போது 499 ரூபாய்க்கு கிடைக்கும். இதனுடன், டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவும் 1 வருடத்திற்கு வழங்கப்படுகிறது. விலை உயர்ந்த போது இந்த திட்டம் ரூ.601 ஆக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூ.499 திட்டத்தில் என்ன நன்மைகள்:
ஜியோவின் (Jio Plan) இந்த திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் 2 ஜிபி அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. அதாவது பழைய விலைக்கே இந்த திட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலை உயரத்தப்பட்ட பிறகு, 601 ரூபாய் ஆக ஆனது. ஆனால் அதில் சில சலுகைகள் கூடுதலாக வழங்கப்பட்டது. 


ALSO READ | ப்ரீபெய்டு திட்டங்களின் காலத்தை 30 நாட்களாக உயர்த்த வேண்டும் -  டிராய் அதிரடி உத்தரவு!


601 ரூபாய்க்கு என்ன சலுகை கிடைத்தது:
இந்த திட்டத்தைப் பற்றி பேசுகையில், ரூ.601 திட்டம் OTT சந்தா, 3GB அதிவேக டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு, 100 SMS மற்றும் ஒரு வருடத்திற்கு Disney + Hotstar மொபைல் சந்தா வழங்கப்பட்டது. இது தவிர, JioTV, JioCinema, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றின் வழக்கமான சந்தாவும் கிடைத்தது, இது இப்போதும ரூ.499 திட்டத்திலும் வழங்கப்படுகிறது. அதே சமயம் ரூ.499 திட்டத்தில் டேட்டா முடிந்த பிறகு 64kbps வேகம் கிடைக்கும்.


ALSO READ | Jio அசத்தல்; ரூ. 150-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரீசார்ஜ் திட்டம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR