பவர் பேங்க் மற்றும் போர்ட்டபிள் சார்ஜர்கள் அண்மைக்காலமாக தினசரி தேவையாகிவிட்டன. பயணத்தின் போது அல்லது மின்சாரம் இல்லாதபோது, சார்ஜ் தீர்ந்துவிட்டால் பவர்பேங்க் கைகொடுக்கிறது. பேட்டரி பேக்கப்போல் எல்லோரும் பவர்பேங்க் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சீனாவைச் சேர்ந்த எலக்டிரானிக்ஸ் வல்லுநர், உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | கம்மி விலையில் அனைத்து வசதிகளுடன் Redmi Smartphone விரைவில் அறிமுகம்


அவரது பெயர் ஹேண்டி ஜெங். தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ‘27,000,000 mAh போர்ட்டபிள் பவர் பேங்க்’ என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை அண்மையில் பதிவேற்றியுள்ளார். அதில், தான் வடிவமைத்துள்ள உலகிலேயே மிகப்பெரிய பவர் பேங்கை பார்வையாளர்களுக்கு காண்பித்தார். அதிகபட்சம் 3 ஆயிரம் அல்லது 4000 mAh திறன் கொண்ட பேட்டரிகள் மட்டுமே இருக்கும் நிலையில், மிகப்பெரிய பவர் பேங்க் ஒன்றை வடிவமைத்தால் என்ன? என்று தனக்கு தோன்றியதாக தெரிவிதுள்ள ஜெங், அதனடிப்படையில் மிகப்பெரிய பவர் பேங்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். 



இதற்காக மின்சார கார்களில் பயன்படுத்தும் பேட்டரிகளை கொண்டு இந்த பவர் பேங்கை அவர் உருவாக்கியுள்ளார். ஜெங் உருவாக்கியுள்ள பவர் பேங்கில் ஒரே சமயத்தில் 5 ஆயிரம் ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். டிவி மற்றும் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் ஆகியவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால், எலக்ரிடிக் ஸ்கூட்டருக்கு தேவையான சார்ஜிங்கையும் அவர் உருவாக்கியுள்ள பவர் பேங்க் மூலம் செய்து கொள்ள முடியும். இந்த பவர் பேங்கில் சக்கரம் வைக்கப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமானாலும் வாகனங்களுடன் இணைத்து எடுத்துச் செல்லலாம்.  மிகப்பெரியதாக இருப்பது மட்டுமே இந்த பவர் பேங்கின் குறை. ஏனென்றால் எல்லோராலும் அதனை அவ்வாறு எடுத்துச் செல்ல முடியாது.


ALSO READ | Post Office சூப்பர்ஹிட் திட்டம்! ரூ.16 லட்சம் வருமானம் பெறலாம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR