புதுடெல்லி: 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது மாதம் தொடங்கியுள்ளது, இந்த மாதத்திலேயே பல புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. சீன ஸ்மார்ட்போன் பிராண்டான ரெட்மி தனது புதிய ஸ்மார்ட்போன் தொடரான ரெட்மி நோட் 11 சீரிஸை பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த தொடரில் Redmi Note 11 மற்றும் Redmi Note 11S ஆகிய இரண்டு போன்கள் வெளியிடப்படுகின்றன. அவற்றின் அம்சங்கள் மற்றும் விலை பற்றி தெரிந்து கொள்வோம்.
Redmi Note 11 Series விலை
தற்போது, ரெட்மி (Redmi Note 11 Series) தனது புதிய ஸ்மார்ட்போன் சீரிஸின் விலை குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. டிப்ஸ்டர் Yoges Brar படி, Redmi Note 11 இன் விலை ரூ.13,999 அல்லது ரூ.14,499 மற்றும் Redmi Note 11S ரூ.16,999 அல்லது ரூ.17,499 ஆக இருக்கலாம்.
ALSO READ | மிகக்குறைந்த விலையில் iPhone 13 வாங்க சூப்பர் வாய்ப்பு
Redmi Note 11 இன் அம்சங்கள்
Redmi Note 11 ஆனது 6.43-inch AMOLED டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட்டில் வேலை செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும். இதில் 50MP பிரதான சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்பைப் பெறுவீர்கள். இந்த ஃபோன் 13MP செல்ஃபி கேமரா மற்றும் 33W சார்ஜிங் ஆதரவுடன் 5,000mAh பேட்டரியுடன் வருகிறது.
Redmi Note 11S இன் அம்சங்கள்
Redmi Note 11S இல் 6.43-inch FHD + AMOLED டிஸ்ப்ளேவைப் பெறுவீர்கள், மேலும் இது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் வரும். MediaTek Helio G96 சிப்செட்டில் இயங்கும் இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி Storage உள்ளது. Redmiயின் இந்த போனில், 5,000mAh பேட்டரியுடன் 33W சார்ஜிங் ஆதரவைப் பெறுவீர்கள். 108MP முதன்மை சாம்சங் HM2 சென்சார், 8MP அல்ட்ரா-வைட் சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் லென்ஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய குவாட் ரியர் கேமரா அமைப்புடன் இந்த ஃபோன் வரும். இது 16MP முன் கேமராவையும் கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் சீரிஸ் பிப்ரவரி 9 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படும், அதன் பிறகுதான் இந்த சீரிஸின் ஸ்மார்ட்போன்களின் விலை என்ன, அவற்றை எவ்வாறு வாங்கலாம் என்பது அதிகாரப்பூர்வமாக அறியப்படும்.
ALSO READ | WFH செய்பவர்களுக்கு சூப்பர் செய்தி: Vi அதிரடி திட்டம் அறிவிப்பு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR